மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 செப் 2017

பெண்கள் நடத்தவுள்ள மொபைல் கேன்டீன்!

பெண்கள் நடத்தவுள்ள மொபைல் கேன்டீன்!

கர்நாடக மாநிலத்தில் வாழும் ஏழை, எளிய மக்களின் நலனுக்காகக் கடந்த ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி மலிவு விலையில் உணவு வழங்கும் இந்திரா கேன்டீன்கள் தொடங்கப்பட்டது.

தற்போது கர்நாடகா மாநில மகளிர் மேம்பாட்டுக் கழகம் இந்திரா சவிருச்சி கைத்துதூ மொபைல் கேன்டீன்களை அறிமுகப்படுத்த உள்ளது.

கர்நாடகாவின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாநில உருவாக்க நாளான நவம்பர் 1ஆம் தேதி இந்த கேன்டீன்கள் தொடங்கப்படும். பெண் ஊழியர்கள் மட்டுமே இந்த கேன்டின்களை இயக்கவுள்ளனர்.

பெண்களை மேம்படுத்துவதற்கான இந்தத் திட்டம் காங்கிரஸ் அரசாங்கத்தின் லட்சிய திட்டமாகவுள்ளது. அனைத்து மாவட்ட தலைமையகங்களிலும் இந்த உணவகம் செயல்படுத்தப்படும். வெற்றியை அடிப்படையாகக் கொண்டு, அது தாலுகாக்களிலும் அறிமுகப்படுத்தப்படும் என கர்நாடகா மாநில மகளிர் மேம்பாட்டுக் கழகம் தலைவர் பாரதி ஷங்கர் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் 20 பெண்கள் சுயஉதவிக் குழுக்களின் கூட்டமைப்பு இருக்கும். ஒவ்வொரு கூட்டமைப்புக்கும் கர்நாடக மாநில நிதி கழகத்தின் மூலம் 10 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்படும். இந்தக் கடன் 4% வட்டிக்கு வழங்கப்படும்.

அந்தத் தொகை பாத்திரங்களுக்காகவும், உழைப்புக்கான மூலதனமாகவும், குறிப்பிட்ட வடிவமைக்கப்பட்ட வாகனத்துக்கும் பயன்படுத்தப்படும்.

மைசூரில் உள்ள மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தின் மூலம் மொபைல் உணவகங்களின் மேலாண்மை, தயாரிப்பு மற்றும் சுகாதாரம் ஆகியவற்றுக்கான பயிற்சியைப் பெண்களுக்கு அளிக்கப்படும்.

மொபைல் கேன்டீனின் உணவு பட்டியல் மற்றும் விலைகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

புதன், 13 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon