மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 செப் 2017

மா.கா.பா-வின் ‘மாணிக்’!

மா.கா.பா-வின் ‘மாணிக்’!

தொலைக்காட்சி மற்றும் பண்பலைகளில் தொகுப்பாளராக இருந்து பின்பு திரைத்துறை வந்தவர் மா.கா.பா.ஆனந்த். இதுவரையில் ‘வானவராயன் வல்லவராயன்’, ‘நவரச திலகம்’, ‘அட்டி’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது மா.கா.பா.ஆனந்த் கதாநாயகனாக நடித்துவரும் ‘மாணிக்’ திரைப்படத்தை நாளைய இயக்குநர் குறும்பட போட்டியில் வெற்றிபெற்ற மார்ட்டின் என்பவர் இயக்கியுள்ளார். இந்தப் படத்தை மோஹிதா சினி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

ஜூன், 2016இல் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானபோது பாட்ஷா படத்தில் வரும் மாணிக் பாட்ஷா கதாபத்திரத்தில் மா.கா.பா.ஆனந்த் இருப்பது போன்ற போஸ்டரை வெளியிட்டு படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உண்டாக்கினர். ‘எதிர்நீச்சல்’ படத்தில் நடித்த சுஜா குமார் கதாநாயகியாக நடித்துவரும் இந்தப் படத்தில் யோகி பாபு, மனோ பாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தரண் இசை. எம்.ஆர்.பழனிகுமார் ஒளிப்பதிவு.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த போஸ்டரை தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவரும், தென்னிந்திய நடிகர்கள் சங்க பொதுச்செயலாளருமான விஷால் வெளியிட உள்ளார். ‘மாணிக்’ படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறைவடைந்து, இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

புதன், 13 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon