மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 செப் 2017

இந்தியக் கள்ள நோட்டுகளை அச்சிடும் வங்க தேசம்!

இந்தியக் கள்ள நோட்டுகளை அச்சிடும் வங்க தேசம்!

இந்திய ரூபாய் நோட்டுகளின் கள்ள நோட்டுகளை உற்பத்தி செய்வதில் வங்க தேசம் முன்னிலை வகிக்கிறது.

இந்தியாவுக்குள் நுழையும் கள்ள நோட்டுகள் வங்க தேசத்தில் இருந்தே அதிகமாக வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பு பாகிஸ்தானில் இருந்து கள்ள நோட்டுகள் இந்தியாவுக்குள் அதிகமாக நுழைவது வழக்கம். தற்போது பாகிஸ்தானை முந்தி கள்ள நோட்டு உற்பத்தியில் வங்க தேசம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்தத் தகவல்களை இந்துஸ்தான் டைம்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகு புதிதாக 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டது. ரூ.2,000 கள்ள நோட்டுகளை அச்சிட்டு விநியோகிப்பதில் வங்க தேசம் முன்னிலை வகிக்கிறது. இதை எல்லைப் பாதுகாப்புப் படையின் அதிகாரபூர்வத் தகவல் தெரிவிக்கிறது.

2017ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில், 32 லட்சம் ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகளை எல்லைப் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். 2016ஆம் ஆண்டில் வங்கி அமைப்பில் கண்டுபிடிக்கப்பட்ட கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை 7,62,072 ஆக இருந்துள்ளது. இது 2015ஆம் ஆண்டின் எண்ணிக்கையை விட 20.4 சதவிகித உயர்வாகும். பாகிஸ்தான் மற்றும் வங்க தேசத்தில் இருந்து கொண்டுவரப்படும் கள்ள நோட்டுகள், ஜம்மு, பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான், மேற்கு வங்கம், மேகாலயா, அசாம் ஆகிய மாநிலங்களில் உள்ள 13 எல்லை வழிகள் மூலமாக இந்தியாவுக்குள் நுழைகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

புதன், 13 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon