மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 செப் 2017

ஸ்ரேயாவின் புதிய கெட்டப்!

ஸ்ரேயாவின் புதிய கெட்டப்!

தென்னிந்தியத் திரையுலகில் கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாக நடித்து வருபவர் நடிகை ஸ்ரேயா. தனது 17ஆவது வயதில் திரையுலக வாழ்க்கையைத் தொடங்கிய ஸ்ரேயாவுக்கு நேற்று முன்தினம் (செப்டம்பர் 11) 35ஆவது பிறந்த தினம். அவரது பிறந்த நாளை கொண்டாடும்விதமாக தெலுங்கில் அவர் நடித்து வரும் ‘வீர போக வசந்த ராயலு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டனர்.

சிம்புவின் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்துக்குப் பிறகு அரவிந்த் சாமிக்கு ஜோடியாக ‘நரகாசுரன்’ படத்தில் நடித்து வருகிறார். தமிழ்மொழி மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிப் படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். பாலகிருஷ்ணாவுடன் பைசா வசூல் படத்தில் நடித்தவர், இந்திரசேனா இயக்கத்தில் உருவாகிவரும் வீர போக வசந்த ராயலு படத்தில் நடித்து வருகிறார். இதில் நாரா ரோஹித், விஷ்ணு சத்யதேவ் முன்னணி ரோலில் நடிக்கிறார்கள்.

ஏர் ஹோஸ்டாக நடித்துள்ள ஸ்ரேயா இதுவரை நடித்துள்ள படங்களிலிருந்து மாறுபட்ட தோற்றத்தில் நடித்து வருகிறார். ஸ்ரேயா புது கெட்டப்பில் வெளியாகியுள்ள போஸ்டர் ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்று வருகிறது. இந்தப் படத்தின் நடிப்பின் மூலம் பெரிதளவில் கவனிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதன், 13 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon