மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 செப் 2017

சாம்சங்கின் இந்த போனும் வெடிக்குமா ?

சாம்சங்கின் இந்த போனும் வெடிக்குமா ?

இந்தியாவில் மொபைல் விற்பனையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் சாம்சங், பல்வேறு மாடல்களை அவ்வப்போது வெளியிட்டவண்ணம் இருக்கிறது. அதன்படி, ‘கேலக்ஸி நோட் 8’ ஸ்மார்ட்போன் மாடல்கள் தற்போது வெளியிட்டுள்ளன. 6.3 இன்ச் HD டிஸ்பிளே, டூயல் 12 MP பிரைமரி கேமரா, ஐரிஸ் ஸ்கேனர், கைரேகை ஸ்கேனர், இதயத் துடிப்பு சென்சார், வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி உள்ளிட்டவை இதில் இடம்பெற்றுள்ளன.

முன்னதாக அமெரிக்காவில் நடைபெற்ற விழாவில் சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், அமெரிக்கா மற்றும் தென்கொரிய முன்பதிவில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இத்துடன் இந்தியாவில் வெளியீட்டுக்கு முன்னரே சுமார் 2.5 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

6.3 இன்ச் HD டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட், சாம்சங் எக்சைனோஸ் ஆக்டா கோர் சிப்செட் - 6 ஜிபி ரேம், 64 GB இன்டர்னல் மெமரி மற்றும் மெமரியைக் கூடுதலாக நீட்டிக்கும் வசதி, ப்ளூடூத் 5.0, வோல்ட்-LTE, டூயல் 12 MP பிரைமரி கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமரா, 3300 mAh பேட்டரி, ஆண்ட்ராய்டு 7.1.1 நக்கட் போன்றவை சாம்சங் ‘கேலக்ஸி நோட் 8’இன் சிறப்பம்சங்கள்.

புதிய சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக் மற்றும் மேப்பிள் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் ரூ.67,900 முதல் துவங்கும் கேலக்ஸி நோட் 8 விற்பனை செப்டம்பர் 21-ம் தேதி துவங்குகிறது. இந்தியாவில் அமேசான் தளம் மற்றும் சாம்சங் விற்பனை மையங்களில் மட்டுமே பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது.

சாம்சங் புதிய கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியாகும் அதே நாளில், ஆப்பிள் நிறுவனமும் தனது ஃபிளாக் ஷிப் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவிருப்பது குறிப்பிடத்தக்கது.

6 ஜிபி Ram, 64 GB Internal மெமரி, வோல்ட்-LTE போன்ற சேவைகள் இருந்தும், 3300 mAh பேட்டரி திறன் மட்டுமே உள்ளது. இது ஒன்றின் திறனை மற்றொன்று தாங்கும் வகையில் உருவாக்கப்படவில்லை என்பதையும், அந்த மொபைலையோ, நிறுவனத்தையோ மொபைல் மார்க்கெட்டிலும் எந்தவிதத்திலும் உயர்த்தவில்லை. மாறாக அனைத்து நிறுவனங்களும் வெளியிடும் உயர் ரக மொபைல் வரிசையில் சாம்சங்கும் ஒரு மொபைலை ரிலீஸ் செய்திருக்கிறது என்ற பெருமை மட்டுமே சாம்சங்குக்கு உண்டு. சாம்சங் மொபைல்கள் வெடிக்கின்றன என்ற கூற்றை மறுக்கும் விதத்தில், இந்த மொபைலில் எந்த தெளிவும் இல்லாததால் அந்த அச்சம் இன்னும் நீடிக்கிறது.

புதன், 13 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon