மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 12 செப் 2017

மாநகராட்சிப் பள்ளிகளில் வள வகுப்பறைகள்!

  மாநகராட்சிப் பள்ளிகளில் வள வகுப்பறைகள்!

மனித நேயர் சென்னை மாநகர மேயர் ஆன அந்த நாளில் இருந்து சென்னை மாநகராட்சி தனது அத்தனைத் துறைகளிலும் மறுமலர்ச்சி கண்டது. ஒரு கல்வியாளர், ஒரு மனித நேயர், ஒரு சமூக அறிவாளி, ஒரு பூகோளத் தெளிவு பெற்றவர் என்று பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட சைதை துரைசாமி அவர்கள் மேயர் ஆன நாள் சென்னை மாநகர வரலாற்றில் ஒரு பொன்னாள்.

மனித நேயரின் நிர்வாகத்தில் மாநகராட்சியின் ஒவ்வொரு துறையும் அடைந்த முன்னேற்றங்கள், மேம்பாடுகள் பற்றியெல்லாம் பார்ப்போம்.

முதன் முதலில் மனித நேயருக்குப் பிடித்தமான கல்வித்துறையில் இருந்தே வெற்றிப் பயணத்தைத் தொடங்குவோம்.

பொதுவாகவே சென்னை மாநகராட்சிப் பள்ளிகள் பற்றிய பொது பிம்பம் ஒன்று கட்டமைக்கப்பட்டு வருகிறது. அது என்னவென்றால் மாநகராட்சிப் பள்ளிகள் கல்வித் தரத்தில் குறைந்தவை. அங்கே சென்னையின் பூர்வகுடி மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்படுகிறார்கள், அங்கே சரியான கல்வி உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை என்பதுதான் பொதுவாக மாநகராட்சிப் பள்ளிகள் பற்றிய கற்பித பிம்பம். ஆனால் மனித நேயர் மேயர் ஆனதும் மாநகராட்சிப் பள்ளிகள் பற்றிய பிம்பத்தை உடைத்தார், புதிய பிம்பத்தைப் படைத்தார்.

அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

வள வகுப்பறைகள்(SMART CLASS ROOMS)

மாநகராட்சிப் பள்ளிகளில் உள்ள மாணவ மாணவிகளுக்கு கடினமான பாடங்களை எளிமையாகக் கற்கும் வகையில்... கணினி மூலம் இன்றைய மேம்பட்ட தகவல் தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு காட்சி வசதிகளைக் கொண்டு, அனுபவங்களோடு இணைத்து எளிமையாக பயிற்றுவிக்கப்படுகிறது. இது மாணவர்ளின் கற்றலை எளிமைப்படுத்தும், கற்கும் ஆற்றலை அதிகப்படுத்தும்.

(இந்த வள வகுப்புகள் முதலில் இப்படி ஒரு பெயர் சூட்டியமைக்கே மனித நேயருக்கு பாராட்டுகளைத் தெரிவிக்க வேண்டும். ஸ்மார்ட் கிளாஸ் என்பதற்கு வள வகுப்பறை என்பது மிகக் கச்சிதமான பொருத்தமான பெயர்)

மனித நேயரின் நிர்வாகத்தில் மாநகராட்சிக்கு உட்பட்ட 70 உயர் நிலைப் பள்ளி மற்றும் மேல் நிலைப் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம் எனப்படும் வள வகுப்பறைகள் முதல் கட்டமாக செயல்படுத்தப்பட்டன. மேலும் 14 பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டன. இதனால் தனியார் பள்ளிகளுக்கு இணையாக சென்னை மாநகராட்சிப் பள்ளிகளின் தரம் கற்பித்தலில் உயர்ந்துள்ளது. இந்த வள வகுப்பறைகள் திட்டத்தின் மூலமாக ஆறாம் வகுப்பில் இருந்து 12 ஆம் வகுப்பு வரையிலான 2 லட்சத்து 15 ஆயிரத்து 772 மாணவர்கள் பயன் பெற்றிருக்கிறார்கள்.

மனித நேயர் போட்ட இந்த ஸ்மார்ட் விதையின் காரணமாக சென்னையின் பல்வேறு மாநகராட்சிப் பள்ளிகள் ஊடக கவனம் பெற்று இப்படியும் ஒரு மாநகராட்சிப் பள்ளியா என்று ஆச்சரியத்துடன் செய்திகள் வெளியிட்டன.

அதற்கு ஊடகங்களில் வந்த சில செய்திகளை உதாரணமாகப் பார்க்கலாம்...

’’ஏசி வகுப்பறை, ஸ்மார்ட் கிளாஸ், சிசிடிவி கேமரா கண்காணிப்பு என தனியார் பள்ளிகளை மிஞ்சும் மாநகராட்சிப் பள்ளி வட சென்னையில் இயங்கி வருகிறது. கொடுங்கையூரில் செயல்பட்டு வரும் சென்னை உயர்நிலைப்பள்ளிதான் இவ்வளவு வசதிகளோடு இயங்கி வருகிறது. பள்ளிச் செல்லும் மாணவர்கள், பெற்றோர்கள் என அனைவரையும் வண்ண வண்ண மீன்கள் வரவேற்கின்றன. மாணவர்கள் விளையாடி மகிழ அழகிய தோட்டங்கள் உருவாக்கப்பட்டு அங்கு பறவைகளும் வளர்க்கப்படுகின்றன. மாணவர்கள் வேர்க்க வேர்க்க அமர்ந்து பாடம் கற்கும் வகையில் ஃபேன் கூட இல்லாத வகுப்பறைகளை பார்த்திருக்கிறோம். ஆனால் இந்தப் பள்ளிக் கூடத்தில் ஏசி வசதியுடன் கூடிய வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஸ்மார்ட் கிளாஸ் இந்தப் பள்ளிக் கூடத்தில் கணினியைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் வகையில் ஸ்மார்ட் கிளாஸ் என்று சொல்லக் கூடிய நவின வகுப்பறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் சொல்லிக் கொடுக்கும் முறை எளிமைப்படுத்தப்பட்டு மாணவர்களின் கற்கும் திறன் இதனால் அதிகரித்துள்ளது.

பள்ளிக் கூடத்திற்கு வரும் மாணவிகளுக்கு எந்தவிதமான அசம்பாவிதமும் ஏற்பட்டுவிடாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பள்ளியின் நுழைவு வாயில் மற்றும் வகுப்பறையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரம் பாதுகாப்பு வளையத்திற்குள் பள்ளிக் கூடம் கொண்டு வரப்பட்டுள்ளது’’ என்று ஊடகங்களால் பாராட்டப்படுகிறது கொடுங்கையூரில் செயல்படும் சென்னை மாநகராட்சிப் பள்ளி.

இன்னும் இதுபோல் ஏராளமான பள்ளிகள் சென்னை மாநகரில் இயங்கி வருகின்றன. மனித நேயரின் மேயர் சாதனைகளைத் தொடர்ந்து பார்ப்போம்.

கருத்துகளை தெரிவிக்க... [email protected]

வளரட்டும் மனித நேயம்

விளம்பர பகுதி

செவ்வாய், 12 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon