மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 12 செப் 2017

வாங்க சாப்பிடலாம்... இடியாப்பம் (சைவ) பாயா!

 வாங்க சாப்பிடலாம்... இடியாப்பம் (சைவ) பாயா!

இன்று காலை ஃபேஸ்புக் பக்கத்தைத் திறந்தபோது வந்து விழுந்த பதிவு இது...

‘கும்பகோணம் பேருந்து நிலையம். சுடாத காலை வெயில். ‘திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா...’ பாடல் தேனாய் ஒலிக்க... ‘வசந்த பவன்’ ஓட்டலில் ருசியான பொங்கல், வடை, சூடான காபி!’ என்று பத்திரிகையாள நண்பர் ஒருவர் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளது, அவர் கும்பகோணத்திற்கு சென்றிருப்பதைத் தன் நண்பர்களுக்குச் சொல்வதுதான் முக்கியக் காரணமாக இருந்திருக்க முடியும். ஆனால், அவரையும் மீறி எழுதுகிற போக்கில் வசந்த பவனின் பொங்கல், வடை, சூடான காபி வந்து நிற்கிறது என்றால் அதற்குக் காரணம், அந்தச் சுவையும் தரமும்தானே!

அடுத்தத் தேடலில்... இன்னொரு முஸ்லிம் நண்பர் தன் ஃபேஸ்புக் பதிவில்... ‘நாளை நடக்கும் சங்கத் தேர்தலில் வாக்குரிமை உள்ள அனைவரும் ஓட்டுப் போட வேண்டும் என என் மனம் துடிக்கும் அதே வேளையில் நாளைக்கு நான் வசிக்கும் ஊரில் இருக்கும் ‘வசந்த பவன்’ ஓட்டலில் சாப்பிட வேண்டும் என்றும் மனசு துடிக்குது... #என்னவோ திடீர்னு சைவ சாப்பாடு மேல ஆசை...’ என்று சைவ சாப்பாடு என்றால் அதை வசந்த பவனில்தான் சாப்பிட வேண்டும் என்கிற ஆசையைத் தன்னிச்சையாக வெளிப்படுத்தியுள்ளார்.

இவர் மட்டுமல்ல... அடிக்கடி பயணப்படும் ஓர் அன்பர் தன் ஃபேஸ்புக் பக்கத்தில், ‘சூடான சாம்பார் ஜஸ்ட் அரை லிட்டர், பதினாலு குட்டி இட்லிகள், ரெண்டு ஸ்பூன் நெய், ஒரு கப் கெட்டிச்சட்னி, ஸ்ட்ராங் காபியுடன் இரவு உணவு இனிதே முடிந்தது. #வசந்தபவன்@#விக்கிரவாண்டி_சுங்கச்சாவடி’ என்று பதிவிட்டுள்ளது நினைவுக்கு வருகிறது.

இப்படி தரமான உணவு என்றால் அது நம்ம வீடு வசந்த பவனில்தான் கிடைக்கும் என்கிற நம்பிக்கையை அழுத்தமாக பதிப்பது சாதாரண விஷயமா!

போட்டிகள் பல நிறைந்த உலகில் அதுவும் உணவகத் தொழிலில் பல்வேறு இடங்களில் கிளைகளைத் திறந்து, அங்குள்ள போட்டியாளர்களை எப்படி சமாளிக்கிறார்?

‘போட்டியாளர்கள் எதிரிகள் அல்ல... அவர்கள் வழிகாட்டிகள்’ என்கிறார் திரு. ரவி.

இது எப்படி சாத்தியம்?

“இந்த வெற்றிக்கு வழிகாட்டியவர், அந்த வெற்றியைச் சாத்தியமாக்கியவர் என் தந்தை முத்துகிருஷ்ணன். சிறிய அளவில் உணவகத்துறையில் கால்பதித்தவர் என் தந்தை. அவர் தனக்கு இருந்த அனுபவங்களைக்கொண்டு திருச்சி சாரதாஸ் அருகே வசந்த பவன் உணவகத்தைத் தொடங்கினார். தற்போது 82 வயதாகும் அவர் திருச்சியில் உணவகத்தைக் கவனித்துக்கொள்வதுடன் வெளிநாடுகளிலும் கிளை தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். பின்னர் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் எதிரே வசந்தபவன் உணவகத்தை ஆரம்பித்தார்.

1991இல் என் தாய்க்குப் புற்றுநோய் ஏற்பட்டு சிகிச்சைக்காகச் சென்னைக்கு அழைத்து வந்தோம். அவரை உடனிருந்து பார்க்கும் பொறுப்பு என்னுடையதானது. கூடவே எழும்பூரில் இருந்த உணவகத்தையும் பார்த்துக்கொள்ளும்படி அப்பா சொல்லிவிட்டார். இப்படித்தான் நான் உணவகத் துறையில் நுழைந்தேன். அப்பாவின் வழிகாட்டுதலினால் இன்றைக்கு பல கிளைகள் கொண்டதாக விரிவாக்கம் செய்திருக்கிறேன். அவர் சொன்ன அறிவுரைகள்தான் இதைச் சாத்தியப்படுத்தியிருக்கிறது.

தினசரி உணவகத்துக்குப் போக வேண்டும் என்பார் அப்பா. ஆடம்பரமான ஆடைகள் அணியக் கூடாது. செயின், பிரேஸ்லெட், விலையுயர்ந்த காலணிகள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும் என்றும் சொல்வார். தலைமுடியை ஒட்டி வெட்டியிருக்க வேண்டும்; நகம் வளர்க்கக் கூடாது; தூய்மைக்கும் தரத்துக்கும் முதலிடம் தர வேண்டும் என்றெல்லாம் வலியுறுத்துவார். இது எனக்கான அறிவுரையாக அமைந்தது.

உணவக விஷயத்தில்... ‘சுவை அதிகமாக இருக்க வேண்டும்; விலை மலிவாக இருக்க வேண்டும்’ என்பார். எடை போட்டு அளந்து பரிமாறுவது தவறு என்பதுடன் சாப்பிட வந்தவர்கள் விரும்பும் வண்ணம் பரிமாறுவதும் மிக அவசியம் என்றும் வலியுறுத்துவார்.

உதாரணமாகச் சப்பாத்தி சாப்பிடுபவர் தொட்டுக்கொள்ள சாம்பார் கேட்டாலோ, இட்லி சாப்பிடுபவர் குருமா கேட்டாலோ தயங்காமல் கொடுக்கச் சொல்வார்.

புதுமைகளைப் புகுத்திக்கொண்டே இருக்க வேண்டும் என்பார். மும்பை சென்று வந்து சோளா பூரி, நான், மசாலா பால் போன்றவற்றை அறிமுகப்படுத்தினார். அசைவ உணவகங்களில் மட்டுமே கிடைத்த புரோட்டாவை, சைவ உணவகத்திலும் புகுத்தினார்.

அந்த உத்வேகத்தில்தான் இடியாப்பம் (சைவ) பாயா போன்றவற்றை நான் அளிக்க ஏற்பாடு செய்தேன். தொலைநோக்குச் சிந்தனை வேண்டும் என்று அப்பா சொல்வார். குறிப்பாக, ’இன்னும் சில வருடங்களில் அபார்ட்மென்ட் வீடுகளில் சமையல் அறை இருக்காது; பேன்ட்ரிதான் இருக்கும். முழுமையாக மக்கள் உணவகங்களையே சார்ந்திருக்கும் சூழல் உருவாகும்’ என்று ஆருடம் கூறுவார். அத்தகைய சூழலை எதிர்கொள்ள நானும் தயார் நிலையிலிருக்கிறேன்.

அப்பா வலியுறுத்தும் உணவகத் தூய்மையை உறுதி செய்யும் விதமாக அனைத்துக் கிளைகளிலும் பணிபுரியும் பணியாளர்களுக்கு அவ்வப்போது பயிற்சி அளிக்கிறோம். தரக் கட்டுப்பாட்டுக்கெனவே நிரந்தரமாக நிபுணர்களையும் நியமித்திருக்கிறோம். `தொழிலில் இருக்கும் போட்டியாளர்களை ஒருபோதும் எதிரிகளாக நினைக்கக் கூடாது; அவர்களை வழிகாட்டிகளாக ஏற்றுக்கொண்டால் மிகப் பெரிய நன்மைகள் விளையும்’ என்பது அப்பா எனக்குச் சொல்லி, நான் பின்பற்றும் முக்கியமான அறிவுரையாகும்” என்று ஒரு பேட்டியில் திரு. ரவி அவர்கள் சொன்னதை நிரூபிக்கும் வகையில் நம்ம வீடு வசந்த பவனின் அத்தனை கிளைகளிலும் மக்கள் கூட்டம் நிறைந்து வழிகிறது.

குறிப்பாக... மயிலாப்பூரில் உள்ள நம்ம வீடு வசந்த பவனின் VB Heritage.

காலை 6.30 மணி முதல் இரவு 10.45 வரை திறந்திருக்கும் இந்த பாரம்பர்ய உணவகத்தில் அப்படி என்ன விசேஷம்?

விளம்பர பகுதி

செவ்வாய், 12 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon