மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 12 செப் 2017

ராம் ரஹிம் ஒரு செக்ஸ் அடிமை: மருத்துவர்கள் !

ராம் ரஹிம் ஒரு செக்ஸ் அடிமை: மருத்துவர்கள் !

பாலியல் வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராம் ரஹிம் பாலியல் பழக்கத்திற்கு அடிமையானவர் என்று அவரைச் சிறையில் பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இரண்டு பெண் சீடர்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தேரா சச்சா சவுதா அமைப்பின் நிறுவனர் ராம் ரஹீம் 20 ஆண்டுகள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் சிறையில் அடைக்கப்பட்டு இரண்டு வாரங்கள் கழிந்துள்ள நிலையில் கடந்த சனிக்கிழமையன்று அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். தன்னைச் சோதித்த மருத்துவர்களிடம், தான் உற்சாகமின்மையாகவும் அமைதியின்மையாகவும் இருப்பதாக ராம் ரஹீம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ராம் ரஹீம் பாலியல் இச்சைகளுக்கு அடிமையானவராக இருக்கலாம் என்று அவரைச் சோதித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவருக்குச் சிறையில் பாலியல் சுகங்கள் எதுவும் கிடைக்காமல் இருப்பதால் தான் அமைதியின்மையுடன் உள்ளார். அவருக்கு விரைவில் சிகிச்சை அளிக்க வேண்டும். இல்லையென்றால் அது பெரிய பிரச்சினையை ஏற்படுத்தும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

அதேவேளையில் அவர் போதைப்பொருட்களுக்கு அடிமையானவராக என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை. 1988ம் ஆண்டு வரை அவர் மது உட்கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது. தற்போது அவர் மது உட்கொள்ளவில்லை என்றபோதும் இதற்கு முன்னர் ஊக்க பானங்களையும் பாலியல் மருந்துகளையும் ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்து அவர் பருகிவந்தார் என்று தேரா ச்ச்சா அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் தெரிவித்திருந்தார்.

முன்னதாக சிறையில் தனக்கு மசாஜ் செய்வதற்கு வளர்ப்பு மகள் ஹனிபிரீத்தை அனுமதிக்கும்படி அவர் கோரிக்கை வைத்திருந்தார். ஆனால் இதுவரையில் தனது மனைவியோ, சொந்த மகள்களோ சிறையில் உடன் இருக்க வேண்டும் என்று அவர் கோரியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 12 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon