மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 12 செப் 2017

த்ரிஷாவின் காதலருக்கு திருமணம்!

த்ரிஷாவின் காதலருக்கு திருமணம்!

தமிழ், தெலுங்கு என முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்து வருபவர் நடிகை த்ரிஷா. அவருக்கும் வருண் மணியனுக்கும் நிச்சயிக்கப்பட்டு திடீரென்று திருமணம் நின்று போனது. இந்நிலையில் தொழிலதிபரும் தயாரிப்பாளருமான வருண் மணியன் அரசியல்வாதி கே.பி. கந்தசாமியின் பேத்தி கனிகா குமரனை மணமுடிக்க உள்ளார்.

வாயை மூடி பேசவும், காவியத்தலைவன் படங்களை தயாரித்தவர் வருண் மணியன். தொழில் அதிபரான இவர்,த்ரிஷாவை காதலித்து வந்ததுடன், கடந்த 2015 ஆம் ஆண்டு

இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தமும் நடைபெற்றது. ஆனால் என்ன காரணமோ திருமணம் நின்று விட்டது. இவருக்கும் நடிகை பிந்து மாதவிக்கும் காதல் என்று கூறப்பட்டது. அதனை மறுத்த வந்த வருண் தற்போது கனிகா குமரனை மணமுடிக்கவுள்ளார்.

கனிகா மறைந்த முன்னாள் அமைச்சர் கே.பி.கந்தசாமியின் பேத்தியாவர். பேஷன் மேகஸின் ஒன்றில் தலைமை பொறுப்பில் உள்ள கனிகாவும் வருணும் சில மாதங்களாகக் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்களின் திருமணம் வருகிற அக்டோபர் மாதம் நடைபெற இருக்கிறது. இதைத் தொடர்ந்து அவர்களின் குடும்பத்தினர் திருமணத்திற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர்.

செவ்வாய், 12 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon