மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 12 செப் 2017

ஆங்கிலம் பேசியவர் மீது தாக்குதல் : மூவர் கைது!

ஆங்கிலம் பேசியவர் மீது தாக்குதல் : மூவர் கைது!

டெல்லியில் ஆங்கிலம் பேசியவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

நொய்டாவைச் சேர்ந்தவர் வருண் குலதி (22). இவர், கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 9) தனது நண்பர் அமன் என்பவரை டிராப் செய்வதற்காக மற்றொரு நண்பரான தாக்‌ஷ் என்பவரின் காரில் டெல்லி கன்னாட் பிளேஸ் என்னும் இடத்தில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்குச் சென்றுள்ளார். அப்போது, வருண் தனது நண்பர் அமனுடன் சரளமாக ஆங்கிலத்தில் உரையாடியுள்ளார்.

பின்னர் வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது வருணை, மது போதையில் இருந்த ஐந்து பேர் சுற்றி வளைத்துள்ளனர். அவர்கள் வருணைப் பார்த்து, ஏன் ஆங்கிலத்தில் பேசுகிறாய் என்று கேட்டுள்ளனர். இதனால் வருணுக்கும் அந்த கும்பலுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றி, அந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் வருணைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். பின்னர், அவர்கள் வந்த வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளனர். வருண் அவர்கள் சென்ற வாகனத்தின் பதிவு எண்ணைக் குறித்து வைத்துக்கொண்டார். இந்தச் சம்பவம் குறித்து டெல்லி போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார்.

வண்டியின் பதிவு எண்ணை வைத்து இதுவரை மூன்று பேரை போலீஸார் கைதுசெய்துள்ளனர். மற்ற இருவரையும் போலீஸார் தேடிவருகின்றனர்.

செவ்வாய், 12 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon