மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 12 செப் 2017

நான்கு ஹீரோ - நான்கு ஹீரோயின்: மணிரத்னம் கணக்கு!

நான்கு ஹீரோ - நான்கு ஹீரோயின்: மணிரத்னம் கணக்கு!

அண்மைக் காலத்தில் சிங்கிள் ஹீரோ சப்ஜெக்டுகளாகவே எடுத்துவந்த மணிரத்னம் எந்த நேரத்திலும் தனது ஸ்ட்ராங்கான சப்ஜெக்டுக்குள் நுழையலாம் என்று எதிர்பார்த்ததுபோலவே நடைபெற்றுவிட்டது. தனது அடுத்த படத்துக்கு நான்கு ஹீரோக்களை கமிட் செய்துவிட்டார் மணிரத்னம்.

தென்னிந்திய சினிமாவின் டாப் நட்சத்திரங்களான விஜய் சேதுபதி, பகத் பாசில், சிம்பு, அரவிந்த் சாமி என தனது ஹீரோக்களை லாக் செய்திருக்கும் மணிரத்னம், ஹீரோயின் செலக்ஷனில் களமிறங்கியிருக்கிறார். சமீபத்தில் உறுதிசெய்யப்பட்ட ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் இல்லாமல் மேலும் இரண்டு ஹீரோயின்களுக்கான பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. மிகப் பெரிய நட்சத்திரக் கூட்டணி இணையும் படம் என்பதால், தாராளமாக கால்ஷீட் தேதிகளைக் கொடுக்கக்கூடிய நடிகர் / நடிகைகளை மட்டுமே மணிரத்னம் தேர்ந்தெடுத்து வருகிறார்.

தென்னிந்திய சினிமாவின் டிரெண்டிங் நடிகையாக வலம்வரும் ரகுல் பிரீத் சிங்கூட மணிரத்னம் லிஸ்டில் இருந்திருக்கிறார். ஆனால், ஸ்பைடர் மற்றும் செல்வராகவன் - சூர்யா இணையும் திரைப்படம் என ரகுலின் கால்ஷீட் நிரம்பிவிட்டதால் இப்போது மணிரத்னம் லிஸ்டில் இருக்கும் அடுத்த பெயருக்கு மாறிவிட்டார்கள்.

செவ்வாய், 12 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon