மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 12 செப் 2017

சர்க்கரை இறக்குமதி வரி குறைப்பு!

சர்க்கரை இறக்குமதி வரி குறைப்பு!

25 சதவிகித வரிச் சலுகையில் 0.30 மில்லியன் டன் கச்சா சர்க்கரையை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேற்கு மற்றும் தென் மாநிலங்களில் நிலவும் சர்க்கரைத் தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில் மத்திய அரசு கச்சா சர்க்கரையை இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது: "பண்டிகைக் காலம் நெருங்கிக்கொண்டிருப்பதால் சர்க்கரைக்கான தேவை அதிகரிக்கும். நாடு முழுவதும் சீரான அளவில் சர்க்கரை விநியோகம் செய்ய இறக்குமதி செய்வது அவசியமாகியுள்ளது" என்று கூறியுள்ளது. ஐ.சி.ஆர்.ஏ. துணைத் தலைவர் மஜூம்தார் கூறும்போது, "இந்தப் பருவத்தில் சர்க்கரை இருப்பு அளவு 4.7 மில்லியன் டன்னாக உள்ளது. தற்போது 0.30 மில்லியன் டன் சர்க்கரை இறக்குமதி செய்யப்படவுள்ளது. கடந்த மூன்று மாதங்களாகச் சர்க்கரை இருப்பு 6 மில்லியன் டன்னாக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் சர்க்கரை இருப்பு 7.8 மில்லியன் டன்னாக இருந்தது. இவற்றோடு ஒப்பிடும்போது இந்தப் பருவத்தில் சர்க்கரை இருப்பு குறைவாகவே உள்ளது" என்றார்.

சர்வதேச அளவில் சர்க்கரை விலை சரிந்ததால் சர்க்கரைக்கான இறக்குமதி வரி ஜூலை மாதத்தில் 40 சதவிகிதத்திலிருந்து 50 சதவிகிதமாக உயர்த்தப்பட்டது. தற்போது தேவையையொட்டி இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 12 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon