மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 12 செப் 2017

உணவு தானிய உற்பத்தியில் சரிவு!

உணவு தானிய உற்பத்தியில் சரிவு!

நடப்பு பருவத்தில் இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி வளர்ச்சி குறைவாகவே இருக்கும் என்று நோமுரா ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜப்பானைச் சேர்ந்த நிதிச் சேவை நிறுவனமான நோமுரா, இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி குறித்த தனது ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், அரிசி, பருப்பு வகைகள், எண்ணெய் வித்துப் பயிர்கள் மற்றும் சணல் ஆகியவற்றுக்கான பயிர் விதைப்பு பரப்பு குறைந்துள்ளதால் நாட்டின் ஒட்டுமொத்த உணவு தானிய உற்பத்தியில் சரிவு ஏற்படும் என்று கணித்துள்ளது.

நோமுரா ஆய்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: “ஜூன் - செப்டம்பர் பயிர் பருவம் நிறைவடைய இன்னும் மூன்று வாரங்கள்தான் உள்ளன. பருவ மழையும் போதியளவு இல்லாததால் நடப்பு பருவத்தில் பயிர் விதைப்பு குறைவாகவே உள்ளது. இதனால் கடந்த ஆண்டைவிடக் குறைவான அளவிலேயே உணவு தானியங்கள் உற்பத்தி செய்யப்படும். தோட்டக் கலைப் பயிர் உற்பத்தி அதிகரித்திருந்தாலும், ஒட்டுமொத்த வேளாண் துறை வளர்ச்சி 2017-18ஆம் ஆண்டில் 3.3 சதவிகிதமாகவே இருக்கும். மோசமான வானிலை, உணவு தானியங்களுக்கான விலை சரிவு ஆகிய காரணங்களால் கோடைக்காலப் பயிர் விதைப்பு பாதிக்கப்பட்டுள்ளது. பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள் மற்றும் சணலுக்கான விலை குறைந்ததால் மொத்த விற்பனை விலைப் பணவீக்கமும் தலா (-) 33%, (-)14 மற்றும் (-) 35 சதவிகிதம் குறைந்துள்ளது.”

செவ்வாய், 12 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon