மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 12 செப் 2017

புதிய வடிவில் ஜியோமி `எம்ஐ மிக்ஸ் 2'!

புதிய வடிவில் ஜியோமி `எம்ஐ மிக்ஸ் 2'!

ஜியோமியின் கடந்த `எம்ஐ நோட் 3', `எம்ஐ நோட் 4' படைப்புகளைத் தொடர்ந்து இந்த வருடம் `எம்ஐ மிக்ஸ் 2' என்ற புதிய ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்யவுள்ளது. முந்தைய மாடல்களைக் காட்டிலும் இது ஸ்லிம்மாகவும், டிஸ்ப்ளே பெரிதாகவும், வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜியோமியின் மற்ற மொபைல்களைவிட இது 12% மெல்லிதாக இருக்கும். `பெஸல் லெஸ்' டிசைன் இதன் தனிச் சிறப்பாகும்.

`எம்ஐ மிக்ஸ் 2' வைச் சுற்றிலும் அலுமினியம் ப்ரேம் மூலம் ஓரங்கள் வளைவாக வடிவமைக்கப் பட்டிருக்கும். இதன் டிஸ்ப்ளே திறன் 5.99 இஞ்ச் HD தொழில்நுட்பம் கொண்ட `விவோ வி 7 பிளஸ்' ஐப் போலிருக்கும். கொரில்லா கிளாஸ் 3, குவால்காம் 450 பிராசசர், 6GB ram வசதி, 64 GB, 128 GB, 25 6GB inbuild ஸ்டோரேஜ் வசதி உள்ளடங்கியது.

`பெஸல் லெஸ்' டிசைன் கொண்டிருப்பதால், இதில் மற்ற போனைப் போல இரட்டை கேமரா வசதி இருக்காது. 12 MP வசதி கொண்ட ஒரே ஒரு சோனி IMX386 சென்சார் கொண்ட பின்புற கேமரா இருக்கும். போனின் கீழ்புறத்தில் 5 MP வசதி கொண்ட முதன்மை கேமரா இருக்கும். அத்துடன் மறைமுக ஸ்பீக்கர், ப்ராக்சிமிட்டி சென்சார் கொண்டிருக்கும்.

ஆண்ட்ராய்ட் 7.1 நக்கட் இதன் சிறப்பம்சங்களாகும். இதன் பாட்டரித் திறன் 3400 mAh வசதிகொண்டதால், இதன் செயல்பாடு நீண்ட நேரம் நீடித்திருக்கும். வெள்ளை, கறுப்பு நிறங்களில் கிடைக்கிறது.

`எம்ஐ மிக்ஸ் 2'ன் 6 GB ram வசதி கொண்ட 64GB Inbuild ஸ்டோரேஜ் போன் 33,000/-, 128GB Inbuild ஸ்டோரேஜ் போன் 36,000/-, 256 GB Inbuild ஸ்டோரேஜ் போன் 40,000/- ரூபாய்க்கும் விற்பனைக்கு வருகின்றன

செவ்வாய், 12 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon