மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 12 செப் 2017

கருப்பனால் நயன்தாரா படத்திற்குச் சிக்கல்!

கருப்பனால் நயன்தாரா படத்திற்குச்  சிக்கல்!

விஜய் சேதுபதி, தன்யா நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் `கருப்பன்'. இந்தப் படத்திற்குத் தணிக்கை அதிகாரிகள் `யு' சான்றிதழ் கொடுத்து க்ரீன் சிக்னல் அளித்துள்ளனர். விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் சென்சாரில் `யு' சர்டிபிகேட் கிடைத்துள்ளது, வரும் (செப்டம்பர் 29) ஆயுத பூஜையன்று வெளிவரும் என்று தெரிவித்துள்ளார். இதனால் நயன்தாராவின் அறம் படத்திற்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஆயுத பூஜை விடுமுறை தினத்தன்று கிட்டத்தட்ட 9 படங்களுக்கும் மேல் ரிலீஸாக இருந்தன. ஆனால் கடும் போட்டியால் பல படங்கள் ரிலீஸ் தேதியை மாற்றிவைத்தன. விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் படங்கள் மோதவிருந்த நிலையில், சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் திரைப்படம் டிசம்பருக்குத் தள்ளிப் போனது. தற்போது கருப்பன் படம் ஆயுத பூஜையன்று வெளிவர இருப்பதால், அதே நாளில் வெளியாகவுள்ள நயன்தாராவின் அறம் படக் குழுவினருக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

ஆயுத பூஜை தினத்தன்று, ஜி. வி. பிரகாஷின் `செம', கௌதம் கார்த்திக்கின் `ஹர ஹர மகாதேவகி', சந்தானத்தின் `சர்வர் சுந்தரம்' உள்ளிட்ட படங்கள் வெளியாகவிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 12 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon