மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 12 செப் 2017

தமிழகத்தில் மழை: வானிலை மையம்!

தமிழகத்தில் மழை: வானிலை மையம்!

தமிழகம், புதுவையில் இன்று (செப்டம்பர் 12) சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வெப்பச்சலனம் காரணமாகவும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் மேற்கு பருவமழை காலத்தில் தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் 1ஆம் தேதி முதல் நேற்று (செப்டம்பர் 11) வரை வழக்கமாக பெய்யவேண்டிய மழையை விட கூடுதலாக 47 சதவீதம் மழை பெய்துள்ளது. தென்மேற்குப் பருவமழைக் காலத்தில், சென்னை மாவட்டத்தில் 395.9 மி.மீ மழை பெய்திருக்கிறது. இது வழக்கத்தைவிட 12 சதவிகிதம் அதிகம்  என தெரிவித்துள்ளது.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் குன்னூர் 9 செ.மீ. பெரம்பலூர், மேட்டுக்குப்பம் தலா 5 செ.மீ., வெண்பாவூர், திருவண்ணாமலை தலா 4 செ.மீ. மழை பெய்துள்ளது.  மற்ற பல இடங்களில் லேசான  மழை பதிவாகி உள்ளது.

செவ்வாய், 12 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon