மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 12 செப் 2017

மாதவனுடன் நடிக்க ஆசை: சுனைனா

மாதவனுடன் நடிக்க ஆசை: சுனைனா

விஜய் ஆண்டனியுடன் இணைந்து ‘காளி’ படத்தில் நடித்துவரும் சுனைனா நடிகர் மாதவனுடன் நடிக்க ஆசை இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

‘காளி’ படத்தை ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில், கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ளார். அண்மையில் இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியது. 1980இல் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ‘காளி’ படத்தின் தலைப்பை இந்தப் படத்திற்கும் சூட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுனைனாவின் முதல் படமான ‘காதலில் விழுந்தேன்’-க்கு விஜய் ஆண்டனி சிறந்த இசையமைத்து படத்தின் வெற்றியில் முக்கியப் பங்கு வகித்தார். தற்போது அவருடன் ஜோடி சேர்ந்து நடிப்பதில் மிகுந்த உற்சாகத்துடன் இருப்பதாக சுனைனா கூறினார். தமிழ் சினிமாவில் ஒரு சில பெண் இயக்குநர்களே இருக்கும் நிலையில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் நடிப்பது மிகுந்த பெருமையாக இருப்பதாகவும் சுனைனா கூறுகிறார். ஒரு பெண் இயக்குநரால் எல்லா விதமான உணர்வுகளையும் தன் படத்தில் கொண்டுவர முடியும் என்று கிருத்திகா நிரூபித்திருக்கிறார் என்கிறார் சுனைனா.

கடைசியாக பார்த்த ‘விக்ரம் வேதா’ திரைப்படத்தைப் பற்றி வெகுவாகப் பாராட்டும் சுனைனா, மாதவனின் நடிப்பை சிலாகித்து, அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்குமெனக் கூறியிருக்கிறார்.

செவ்வாய், 12 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon