மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 12 செப் 2017

நேரடி வரி வசூல் அதிகரிப்பு!

நேரடி வரி வசூல் அதிகரிப்பு!

இந்த நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் நேரடி வரி வசூல் 17.5 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.

இதுகுறித்து திங்கட்கிழமை (11.09.2017) மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த நிதியாண்டில் ரூ.9.8 லட்சம் கோடி நேரடி வரி வசூல் செய்ய பட்ஜெட் கணக்கிடப்பட்டுள்ளது. இது இதற்கு முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடும்போது 15.3 சதவிகிதம் கூடுதலாகும். இந்த நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில் (ஏப்ரல் -ஆகஸ்ட்) ரூ.2.24 லட்சம் கோடி நேரடி வரி வசூலிக்கப்பட்டுள்ளது. இது இந்த நிதியாண்டுக்கான மொத்த பட்ஜெட்டில் 22.9 சதவிகிதமாகும். கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது நேரடி வரி வசூல் 17.5 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

கூடுதலாக ரீஃபன்ட் முறையில் ரூ.74,089 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 7.2 சதவிகிதம் கூடுதலாகும். இதற்கு முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும்போது நேரடி வரி வசூலில் பெருநிறுவன வரி வசூல் 5 சதவிகிதமும், தனிநபர் வரி வசூல் 16 சதவிகிதமும் அதிகரித்துள்ளது. ரீஃபன்ட் முறையில் பெறப்பட்ட வரி வசூலில் பெரு நிறுவன வரி வசூல் 18.1 சதவிகிதமும், தனிநபர் வரி வசூல் 16.5 சதவிகிதமும் அதிகரித்துள்ளது" என்று தெரிவித்துள்ளது.

செவ்வாய், 12 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon