மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 12 செப் 2017

ஹெச்.ராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்!

ஹெச்.ராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்!

பாஜகவின் தேசிய செயலாளரான ஹெச்.ராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம் அதாவது மணிவிழா நடைபெற இருப்பதாகவும், அவ்விழாவுக்கு பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, அக்கட்சியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் வருகை தர இருப்பதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஹெச்.ராஜா- லலிதா தம்பதியரின் மணி விழா வருகிற 27-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இவ்விழா சென்னை கோவிலம்பாக்கத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நிகழ இருக்கிறது. இந்த விழாவில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, மூத்த தலைவர் அத்வானி, தமிழக பாஜக தலைவர் தமிழிசை, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பொன். ராதாகிருஷ்ணன், அனந்த குமார், ஹர்ஷவர்தன், தமிழக ஆளுனர் வித்யா சாகர் ராவ், கேரள ஆளுனர் சதா சிவம், புதுவை ஆளுனர் கிரண்பேடி, குஜராத் கவர்னர் ஓம்பிரகாஷ் கோஹ்லி உள்ளிட்ட வி.ஐ.பி.கள் பங்கேற்கிறார்கள்.

முழுக்க முழுக்க பாரம்பரிய முறைப்படி நடக்க இருக்கும் ஹெச்.ராஜாவின் அறுபதாம் கல்யாண விழாவுக்கு தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட இருக்கிறது என்கிறார்கள் கமலாலய வட்டாரத்தில்!

செவ்வாய், 12 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon