மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 12 செப் 2017

ஏலக்காய் விற்பனை ஜோர்!

ஏலக்காய் விற்பனை ஜோர்!

சின்ன ஏலக்காயின் விநியோகத்தை விடத் தேவை சற்று அதிகமாகவே இருந்ததால், ஏலக்காய் சந்தை சிறப்பாக உள்ளது.

செப்டம்பர் 11ஆம் தேதி தமிழகத்தின் போடிநாயக்கனூரில் நடைபெற்ற ஏலத்தில் ஏலக்காய் விற்பனை நிலையாகவே இருந்தது. ஏலக்காய் உற்பத்தியாளர்கள் சங்கத்தால் நடத்தப்பட்ட இந்த ஏலத்திற்கு 19 டன் ஏலக்காய் வந்தடைந்தது. ஒட்டுமொத்த ஏலக்காயும் விற்றுத் தீர்ந்தது. ஏலத்தின் சராசரி விலை கிலோவுக்கு 1,039.25 ரூபாய் முதல் 1,137.88 ரூபாய் வரை அதிகரித்தது. கடந்த வாரத்தில் நடந்த அனைத்து ஏலங்களிலும் ஏலக்காயின் சராசரி விலை கிலோவுக்கு 1,100 ரூபாய்க்கும் அதிகமாகவே இருந்துள்ளது.

மேலும், ஏலக்காயின் சராசரி விலை கிலோவுக்கு 1,108 ரூபாய்க்கும் 1,162 ரூபாய்க்கும் இடையே இருந்து வந்தது. ஏலத்தின் வாராந்திர சராசரி விலை கிலோவுக்கு 1,142.38 ரூபாயாக இருந்துள்ளது. எனவே ஏலக்காயின் விற்பனை கடந்த வாரத்தில் சிறப்பாக இருந்துள்ளது. மேலும், ஏற்றுமதியாளர்களும் கடந்த வாரத்தில் அதிகமாக ஏலக்காய் வாங்கியுள்ளனர். சுமார் 70 டன் ஏலக்காயைக் கடந்த வாரத்தில் ஏற்றுமதியாளர்கள் வாங்கியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் மொத்தம் ஒன்பது ஏலங்கள் நடைபெற்றுள்ளன. இவற்றுக்கு மொத்தமாக 479 டன் ஏலக்காய் வந்துள்ளது. அதில் 474 டன் ஏலக்காய் விற்பனையாகியுள்ளது.

செவ்வாய், 12 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon