மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 12 செப் 2017

பூனம் கவுர் திடீர் விலகல்!

பூனம் கவுர் திடீர் விலகல்!

‘நெஞ்சிருக்கும் வரை’ படத்தின் மூலம் அறிமுகமான பூனம் கவுர் தற்போது நடித்துவரும் ‘நண்டு என் நண்பன்’ படத்தின் ஷூட்டிங்கில் இருந்து விலகினார்.

பூனம் கவுர் ஜித்தின் ரமேஷுடன் இணைந்து நடித்துவரும் இந்தப் படத்தைப் புதுமுக இயக்குநர் ஆண்டாள் ரமேஷ் இயக்குகிறார். கடந்த சில மதங்களுக்கு முன்பு சென்னையில் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்றுவந்தது. பூனம், யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் திடீரென்று தங்கியிருந்த ஓட்டல் அறையைக் காலி செய்துவிட்டு ஐதராபாத் சென்றுவிட்டதாக இயக்குநர் ரமேஷ் தெரிவித்துள்ளார். “படப்பிடிப்பிலிருந்து வெளியேறிய காரணத்தை நாங்கள் கேட்டபோது, என்னால் இந்தப் படத்தில் நடிக்க முடியாது. இதைப் பற்றி எதுவும் பேச விரும்பவில்லை என்றார் பூனம்” என்கிறார் இயக்குநர்.

“இந்தப் படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக பூனம் ஒப்பந்தம் செய்யப்பட்தார். அவர் உடைகளை அவரே தேர்வுசெய்துகொண்டார். நட்சத்திர ஓட்டலில் தங்கி தயாரிப்பாளருக்கு அதிகம் செலவுவைத்தார். இதனால் தயாரிப்பாளருக்குப் பல லட்சங்கள் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது பற்றி நடிகர் சங்கத்திலும், தயாரிப்பாளர் சங்கத்திலும் புகார் செய்ய உள்ளோம்” என்று படக் குழுவினர் கூறுகிறார்கள்.

பூனம் கவுரின் திடீர் விலகலால் படக் குழு அதிர்ச்சியில் இருக்கிறது. திடீரென்று சொல்லாமல் கொள்ளாமல் பூனம் விலகியதற்கான காரணம் மர்மமாகவே இருக்கிறது.

செவ்வாய், 12 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon