மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 12 செப் 2017

பணம் திருடும் வைரஸ்: உஷார்!

பணம் திருடும் வைரஸ்: உஷார்!

தொழில்நுட்ப வளர்ச்சியினால் வீட்டுக்குத் தேவையான மளிகை பொருட்களிலிருந்து ஆடம்பர பொருட்கள் வரை அனைத்தையும் அமர்ந்த இடத்திலிருந்தே ஸ்மார்ட்போன் மூலம் வாங்க முடியும். இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் இல்லாதவர்களே இல்லை என்று கூறும் அளவிற்கு அவை நம் வாழ்வில் முக்கிய அங்கமாகத் திகழ்கிறது. இப்படிப்பட்ட சூழலில் `ஷேப்காபி ட்ரோஜான்' என்ற வைரஸ் தற்போது ஸ்மார்ட்போன்களிடையே வேகமாகப் பரவி வருவதாக சைபர் பாதுகாப்பு நிறுவனமான காஸ்பரஸ்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அந்த வைரஸின் தாக்கம் இந்தியாவில் 40 % இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸானது பயனர்களின் போனில் உள்ள WAP (Wireless Application Protocol) பில்லிங் பேமன்ட் முறையைக் குறிவைத்து பணத்தைத் திருடுகிறது.

இது நேரடியாகப் போனிற்கு வருவதில்லை, பாட்டரி ஆப் மூலமாகப் போனுக்குள் சத்தமில்லாமல் நுழைந்து ரகசியமாக தீங்குவிளைவிக்கும் கோடுகளை போனிற்குள் செலுத்துகிறது. இது பயனர்களிடம் கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் பற்றிய தகவல்கள், பயனாளரின் பெயர், கடவுச்சொல் போன்று எதையும் கேட்பதில்லை.

`ஷேப்காபி ட்ரோஜான்' வைரஸானது `கேப்சா' தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. `கேப்சா' என்பது வலைத்தளங்களில் குறிப்பிட்ட எண்கள் அல்லது எழுத்துக்களைக் கொடுத்து பயனர்கள் அதை நேரடியாக உள்ளீடு செய்யுமாறு வடிவமைக்கப் பட்டிருக்கும்.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 47 நாடுகளில், 4800 பயனர்களை பாதிப்படையச் செய்துள்ளது. ரஷ்யா,துருக்கி, மெக்சிகோவைத் தொடர்ந்து இந்தியாவில் இவ்வகை வைரஸ் 40% கண்டுபிடிக்கப்பட்டு பிளாக் செய்யப் பட்டுள்ளது.

இதுபற்றி காஸ்பரஸ்கியின் உயர் அதிகாரி ரோமன் உனுசெக் கூறுகையில், " WAP பில்லிங் கொள்ளை தற்போது அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த வைரஸானது மொபைல் போன் மூலம் அதிகம் பண பரிவர்த்தனைகள் செய்யும் நாடுகளைக் குறி வைத்து தாக்கிறது. இது போனிற்குள் வந்துவிட்டால், டெக்ஸ்ட் மெசேஜ் அலார்ட்களைக் கூட அழித்துவிடும், பயனருக்குத் திருடப்பட்ட செய்தி கூட தெரியாது. அதனால் மொபைல் போனில் அங்கீகரிக்கப் பட்ட ஆப்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். முறையான ஸ்கேன் செய்து பதிவிறக்கம் செய்வது நல்லது." என்றார்.

செவ்வாய், 12 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon