மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 12 செப் 2017

கூடுதல் இயற்கை எரிவாயு இறக்குமதி!

கூடுதல் இயற்கை எரிவாயு இறக்குமதி!

குறைந்த விலையில் கூடுதலான எரிவாயு ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படவுள்ளது.

ஆஸ்திரேலியா நாட்டிலிருந்து கூடுதலாக ஒரு மில்லியன் டன் இயற்கை எரிவாயுவை இந்தியா வாங்கவுள்ளது. தற்போதைய இயற்கை எரிவாயு விலையில் 12.5 சதவிகித விலையில் ஆண்டுக்கு ஒரு மில்லியன் டன் வரை இயற்கை எரிவாயுவை விற்க எக்சான் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. இந்நிறுவனத்திடமிருந்து 1.44 மில்லியன் டன்னுக்கும் அதிகமான இயற்கை எரிவாயுவை இந்தியாவின் பெட்ரோநெட் எல்.என்.ஜி லிமிட்டட் நிறுவனம் இறக்குமதி செய்யவுள்ளது. பெட்ரோநெட் நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய எரிவாயு இறக்குமதி நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

குறைந்த விலையில் 20 ஆண்டுகளுக்குக் கூடுதலாக எரிவாயுவை இறக்குமதி செய்ய 2009ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் எக்சான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டது. ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தியா வரை எரிவாயு போக்குவரத்துக்கான செலவுகளை எக்சான் நிறுவனமே ஏற்றுக்கொள்ளும். 1.44 மில்லியன் டன் வரை கூடுதல் எரிவாயுவிற்கு தற்போதைய எரிவாயு விலையில் 13.9 சதவிகித விலையில் விற்பனை செய்யப்படும்.

செவ்வாய், 12 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon