மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 12 செப் 2017

தென்மேற்குப் பருவமழை குறைவு!

தென்மேற்குப் பருவமழை குறைவு!

தென்மேற்கு பருவமழை கடந்த சில வாரங்களாகக் குறைந்துள்ளது. இதனால் இந்தப் பருவத்தின் மொத்த மழைப் பொழிவில் 6 சதவிகிதம் குறைந்துள்ளது. ஆனால் மழைப்பொழிவில் காலதாமதம் ஏற்படாது என்று வானிலை அறிக்கை கூறுகிறது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, "மழைப்பொழிவு போதுமான அளவில் இருக்குமா அல்லது வழக்கத்தை விடக் குறைவாக இருக்குமா என்று தெரிந்துகொள்ள இந்த மாத இறுதி வரையில் காத்திருக்க வேண்டும். செப்டம்பர் மாதத்தின் இரண்டாம் பாகத்தில் மழைப்பொழிவு அதிகரிக்க வாய்ப்புள்ளது" என்றார்.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வழக்கமான பருவமழையை விட 12 சதவிகிதம் குறைவாகவே மழைப்பொழிவு இருந்தது. கடந்த நான்கு ஆண்டுகளாகவே பருவமழை பொழிவது 1 வாரம் முதல் 2 வாரம் வரை தாமதமாகி வருகிறது. தென்மேற்கு பருவமழை வழக்கமாக செப்டம்பர் 1ஆம் தேதி தொடங்க வேண்டும்.

இந்த ஞாயிற்றுக்கிழமை வரை, கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவைத் தவிர நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் வழக்கமான பருவமழையை விடக் குறைவாகவே மழை பெய்துள்ளது. இது அடுத்த சில நாட்களில் சரியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செவ்வாய், 12 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon