மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 12 செப் 2017

தினம் ஒரு சிந்தனை: தோல்வி!

தினம் ஒரு சிந்தனை: தோல்வி!

தோல்வியடைவது என்பது எப்போதுமே வருத்தத்துக்குரியதே அல்ல. ஆனால், தோல்வியடைந்து விடுவோம் என்ற நினைப்பில் முயற்சியே செய்யாமல் ஒதுங்குவது மன்னிக்கவே முடியாத குற்றம்

- மைக்கேல் ஜோர்டன் (17 பிப்ரவரி 1963) அமெரிக்காவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தொழில்முறை கூடைப்பந்தாட்ட விளையாட்டு வீரர் மற்றும் தொழிலதிபர். அனைத்துக் காலத்துக்குமான மிகச்சிறந்த கூடைப்பந்து விளையாட்டு வீரராகப் போற்றப்படுகிறார். இவரது நினைவில், கனவில், உணர்வில், எண்ணத்தில் எப்போதும் கூடைப்பந்தே இருந்தது. தனது விளையாட்டு வாழ்வையும் தாண்டி, பல லாபகரமான வர்த்தக முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளார். அமெரிக்காவின் தேசிய கூடைப்பந்தாட்ட சங்க வரலாற்றில் அதிக புள்ளிகளைப் பெறும் விளையாட்டு வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். அதிக மதிப்புமிக்க வீரருக்கான விருதினை ஐந்து முறை வென்றுள்ளார். மேலும், ஒலிம்பிக் தங்கம் உட்பட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.

செவ்வாய், 12 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon