மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 12 செப் 2017

அதிகக் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!

அதிகக் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!

பயணிகளிடம் தேவையில்லாமல் கூடுதல் பணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்திக்கொள்ள ரயில்வே அமைச்சர் காலக்கெடு விதித்து உத்தரவிட்டுள்ளார்.

உணவுக்காகப் பயணிகளிடம் அதிகக் கட்டணம் வசூலிக்க வேண்டாம் என்றும் டிப்ஸ் பெற வேண்டாம் என்றும் கேட்டரிங் ஊழியர்களிடம் ரயில்வே அமைச்சராக பதவியேற்றுள்ள பியூஷ் கோயல் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்த அறிவிப்புகள் ரயில்வே அமைச்சகத்தில் இருந்து நாடு முழுவதிலும் உள்ள ரயில்வே மண்டல அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த வழக்கங்கள் உடனடியாக ஒழிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கத்தைத் திங்கட்கிழமையில் இருந்து 48 மணி நேரத்தில் முழுமையாக நிறுத்திக்கொள்ள ரயில்வே அமைச்சர் காலக்கெடு விதித்துள்ளார். பியூஷ் கோயலின் உத்தரவுகள் நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதை கேட்டரிங் ஆய்வாளர்கள் கண்காணிப்பார்கள். மேலும், அதிக விலையில் உணவு, குடிநீர் வழங்க டிப்ஸ் கேட்பது போன்ற புகார்கள் சமூக வலைதளங்களில் பதிவிடப்படுவதும் கண்காணிக்கப்படும் என்று ரயில்வே அமைச்சகத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 12 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon