மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 12 செப் 2017

ராம் ஜெத்மலானி ஓய்வெடுக்க முடிவு!

ராம் ஜெத்மலானி ஓய்வெடுக்க முடிவு!

மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி தனது 70 ஆண்டு கால வழக்கறிஞர் பயணத்திலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்திய பார் கவுன்சில் சார்பாக, உச்ச நீதிமன்றப் புதிய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு டெல்லியில் செப்டம்பர் 09 அன்று பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில், மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி பங்கேற்றார். விழாவில் பேசிய அவர், “என்னுடைய நீண்டகால வழக்கறிஞர் பணியிலிருந்து, ஓய்வுபெற முடிவு எடுத்திருக்கிறேன். என் உயிர் உள்ளவரை, பொது வாழ்வில் இருப்பேன். அரசியலில் ஊழலை ஒழிப்பது, என் புதிய பணியாக இருக்கும். ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக என் போராட்டத்தைத் தொடர்வேன். ஊழலை எதிர்க்கும் வழக்கறிஞர்களுக்கு, ஆலோசனையையும் வழங்குவேன். தற்போது ஆளும் அரசாக இருக்கட்டும், இதற்கு முன் ஆண்ட அரசாக இருக்கட்டும், எல்லோரும் நாட்டை ஓர் இக்கட்டான சூழலுக்குத் தள்ளிவிட்டனர். இவர்களை எதிர்த்துப் போராட வழக்கறிஞர்களும் மக்களும் முன்வந்து நிற்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

செவ்வாய், 12 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon