மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 12 செப் 2017

பரிசுகளுடன் வரும் மகளிர் மட்டும்!

பரிசுகளுடன் வரும் மகளிர் மட்டும்!

பிரம்மா இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள படம் ‘மகளிர் மட்டும்’. ஊர்வசி, பானுப்ரியா, சரண்யா என நடிகையர் பட்டாளமே இதில் நடித்துள்ளனர். பெண்கள் சம்பந்தப்பட்ட படம் என்பதால் திரையரங்குக்கு வரும் பெண்களைக் கவரும் விதத்தில் இந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான 2D என்டர்டெயின்மென்ட் தனது ட்விட்டர் பக்கத்தில் பரிசு போட்டி ஒன்றை அறிவித்துள்ளது.

சென்ற வாரம் இதன் புரமோஷனில் இது ஆண்களுக்கான படம் என்று விளம்பரப்படுத்தினார்கள். தற்போது, பெண்களைக் கவரும் விதத்தில் திரையரங்குக்கு வரும் பெண்களுக்குக் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பட்டுப் புடவை பரிசாக வழங்கப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஆண், பெண் இருவரும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் இம்மாதிரியான விளம்பரங்களில் படக்குழு ஈடுபட்டுள்ளது. பிரம்மா இயக்கத்தில் வெளியான ‘குற்றம் கடிதல்’ திரைப்படம் தேசிய விருது பெற்றது. அதேபோல இந்தப் படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல அங்கீகாரத்தை பெரும் என எதிர்பார்க்கலாம்.

1994ஆம் ஆண்டு வெளிவந்த ‘மகளிர் மட்டும்’ படத்தில் இடம்பெற்ற பெண் கேரக்டர்களுக்கு வேலை செய்யும் இடத்தில் ஏற்படும் பிரச்னைகளை அழுத்தமாகச் சொல்லியிருப்பார் இயக்குநர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ். அதே போன்று இக்காலப் பெண்களுக்கு ஏற்படும் பிரச்னையைச் சொல்லும் படமாக இது உருவாகியுள்ளது.

செவ்வாய், 12 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon