மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 12 செப் 2017

எழும்பூரில் ரயில் தடம் புரண்டு விபத்து!

எழும்பூரில் ரயில் தடம் புரண்டு விபத்து!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில், நேற்று (செப்டம்பர் 11) ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் உள்ள ஒன்றாவது நடைமேடையில், ரயில் பெட்டியிலிருந்து விடுபட்ட எஞ்சின் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பயணிகளுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. அதேபோல் எந்த ரயில் போக்குவரத்து பாதிப்பும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 7ஆம் தேதி காலை 6.30 மணி அளவில், சென்னை சென்ட்ரல் - பேசின் பிரிட்ஜ் இடையே ஆலப்புழா விரைவு ரயில் எஞ்சின் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதனால், ரயில் சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அதேநாளில் டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மூன்று ரயில்கள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

கடந்த ஒரு மாதமாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ரயில் தடம்புரண்டு விபத்துகள் அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 12 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon