மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 12 செப் 2017

வசூல் சாதனை படைக்கும் இட் (IT)!

வசூல் சாதனை படைக்கும் இட் (IT)!

பிரபல அமெரிக்க எழுத்தாளர் ஸ்டீஃபன் கிங் எழுதிய IT என்ற திகில் நாவலின் அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படம் இட் (IT). 1986இல் வெளிவந்த இந்த நாவல், 1990லேயே தொலைக்காட்சித் தொடராக எடுக்கப்பட்ட நிலையில், இப்போது சினிமாவாக வெளியாகியிருக்கிறது. ஆண்டி மஸ்சீட்டி இயக்கியுள்ள இந்தப் படத்தில் பில் ஸ்கார்ஸ்கார்ட், ஜெடேன் லிபெரெர், சோஃபியா லிலிஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் படத்தை வெளியிட்டுள்ளனர்.

செப்டம்பர் 8ஆம் தேதி வெளியான இந்தப் படத்தின் கதை அமெரிக்காவில் உள்ள சிறிய நகரம் டெர்ரியில் தொடங்குகிறது. சிறுவர்களைக் கொல்லும் கோமாளியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட IT வசூல் ரீதியில் சாதனை படைத்துள்ளது. அமெரிக்காவில் 4,103 இடங்களில் வெளியான இந்தப் படம் முதல் வார இறுதியில் 117.2 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூல் செய்துள்ளது என்று தி கார்டியன் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

திகில் படங்களின் வரிசையில் 2015ஆம் ஆண்டு வெளியான ஹோட்டல் ட்ரான்சில்வேனியா 2 திரைப்படம் வெளியான முதல் வாரத்தில் 48.5 மில்லியன் அமெரிக்க டாலர் வசூல் செய்து சாதனை படைத்திருந்த நிலையில் தற்போது இட் (IT) திரைப்படம் புதிய வசூல் சாதனை படைத்துள்ளது.

செவ்வாய், 12 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon