மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 12 செப் 2017

ஜி.எஸ்.டி: புதிய இந்தியா சூரத்தில் பிறந்தது!

ஜி.எஸ்.டி: புதிய இந்தியா சூரத்தில் பிறந்தது!

அண்மையில் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டியால் ஈர்க்கப்பட்ட பெண் ஒருவர் தனது மூன்று பெண் குழந்தைகளுக்கு ஜி.எஸ்.டியின் முதல் எழுத்தில் தொடங்கும் வகையில் பெயர் சூட்டியுள்ளார்.

சூரத்தைச் சேர்ந்த கான்சல் பட்டேல் என்ற பெண்ணுக்கு ஒரே நேரத்தில் மூன்று பெண் குழந்தைகள் பிறந்துள்ளனர். இந்நிலையில், அவர் தன்னுடைய மூன்று பெண் குழந்தைகளுக்கு ஜி.எஸ்.டியின் முதல் மூன்று எழுத்துகளைக் குறிக்கும் வகையில் பெயர்களை வைத்துள்ளார். கரவி (Garavi,) சாஞ்சி (Sanchi), தாரவி (Taravi) என்று பெயரிட்டுள்ளார்.

இதுகுறித்து கான்சல் பட்டேல் கூறுகையில், “நாடு முழுவதும் ஒரே வரி எங்களை மிகவும் ஈர்த்தது. இதனால், நாட்டு மக்களுக்கு அதிக நன்மை ஏற்படும். இதை பெருமிதப்படுத்தும் வகையில் எங்கள் மூன்று குழந்தைகளுக்கு ஜி.எஸ்.டியின் முதல் மூன்று எழுத்துகளைக் குறிக்கும் வகையில் பெயர்களை வைத்துள்ளோம்” எனக் கூறினார்.

ஜி.எஸ்.டி. என குழந்தைக்குப் பெயர்வைப்பது இது முதன்முறை கிடையாது. ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தில் பிறந்த குழந்தைகளுக்கு இந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளது நினைவுகூரத்தக்கது.

ஜி.எஸ்.டி.யால் மக்கள் கஷ்டப்பட்டுவரும் நிலையில், “குழந்தைகளுக்கு இந்தப் பெயர் தேவையா?” என நெட்டிசன்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய், 12 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon