மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 12 செப் 2017

தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், இரண்டு தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் அடிக்கடி ஊடுருவி வருகின்றனர். கடந்த சில நாள்களுக்கு முன்பு, மாநிலத்தின் பல பகுதிகளில் பாதுகாப்புப் படையினரால் தீவிரமான கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தீவிரவாதிகள் தங்கி இருப்பதாக வந்த தகவலை அடுத்து, இந்தக் கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், குல்காம் மாவட்டத்தில் நேற்று (செப்டம்பர் 11) பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டபோது, அங்குத் தீவிரவாதிகள் இருப்பது தெரியவந்தது. அதனால், பாதுகாப்புப் படையினர் அதிரடியாகக் களத்தில் இறங்கினர். அப்போது நடந்த தாக்குதலில், இஸ்புல் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் ஒரு தீவிரவாதி கைது செய்யப்பட்டதாகப் பாதுகாப்புப் படையினர் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில், பாதுகாப்புப் படையினருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

அதேபோல், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னர் ஜம்மு காஷ்மீரின் ஆனந்த்நாக் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், போலீஸ்காரர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 12 செப் 2017

chevronLeft iconமுந்தையது