மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 13 ஆக 2017

பாலன் என்றொரு திறமைசாலி

 பாலன் என்றொரு திறமைசாலி

சிலர் எந்த வேலை கொடுத்தாலும் சிறப்பாகச் செய்வார்கள். அப்படிப்பட்டவர்தான் பாலன். அவர் எதைச் செய்தாலும் அதை மனப்பூர்மாக சிறப்பாக செய்வார் பாலன். அதனால் அவரை நம்பி நிறைய பெரிய வேலைகள் வரும். தங்களால் செய்ய முடியாத பெரிய வேலைகளைப் பாலனிடம் பேராவூரணிப் பகுதி மக்கள் கொடுத்து விடுவார்கள். சிலர் குளத்தை ஏலம் எடுப்பார்கள். ஆனால் அதில் மீன் பிடித்து, பிடித்த மீனை விற்பனை செய்து பணம் பார்க்கத் தெரியாது. அந்த நேரங்களில் பாலன் தான் அவர்களுக்கு கை கொடுப்பார். அவர் தனக்கு என்ன வேண்டுமோ அதை நேரடியாக கேட்டுப் பெற்றுக்கொள்வார். கிடைக்கும் லாபத்தை அப்படியே உரியவர்களிடம் கொடுத்து விடுவார்கள். பெரிய பெரிய கான்ட்ராக்ட் எடுத்துச் செய்பவர்கள் வேலையை முடிக்க முடியாமல் திண்டாடுவார்கள். அவர்கள் சின்ன சின்ன வேலைகளைப் பாலனிடம் ஒப்படைத்து விடுவார்கள். அந்த வேலையைக் கொடுத்த காலத்திற்கு முன்பே செய்து முடித்துவிடுவார் பாலன். அந்த வேலையானது மெயின் கான்ட்ராக்டர் செய்த வேலையைக் காட்டிலும் சிறப்பாக இருக்கும்.

இப்படி ஓடியாடிப் பல வேலைகளைச் செய்வதால் பாலன் நல்ல வசதியோடுதான் வாழ்ந்தார். ஆனால் பாலனிடம் உள்ள செல்வத்தைக்காட்டிலும் அவரின் நேர்மையே ஊர் மக்களிடம் பெரிய மதிப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் தான் பாலனுக்குத் தனியாக செய்ய வேண்டிய வேலை ஒன்று அரசிடம் இருந்து நேரடியாகக் கிடைத்தது. பாலனின் திறமையைக் கண்ட அரசு அதிகாரிகள் அவரிடம் அழைத்துப் பேசினர். “மிஸ்டர் பாலன்.. உங்களின் திறமையையும் உங்கள் வேலை சுத்தத்தையும் நேர்மையையும் நாங்கள் தொடர்ந்து கவனித்துக்கொண்டுதான் இருக்கிறோம். ஆகவே ஏரியைத் தூர் வாரும் வேலையை உங்களுக்கே நேரடியாகக் கொடுக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறோம்” என்றார்கள். பாலன் எதைக் கண்டும் அஞ்சுவதில்லை. எந்த வேலையையும் செய்யத் தயங்குவதில்லை. ஆனாலும் சிறிது யோசித்தார்.

அதிகாரிகள் நல்ல தொகைக்கு அந்த வேலையைப் பாலனிடம் ஒப்படைக்கத் தயாராக இருந்தார்கள். இதை எடுத்துச் செய்தால் ஒரு கணிசமான தொகை மிஞ்சும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் பெரிய ஏரியைத் தூர் வாருவது என்பது எளிதான வேலையில்லை. சரியான இயந்திரத்தின் துணை கொண்டு அதைச் செய்ய வேண்டும். ஏனென்றால் ஏரி முழுவதும் குப்பை நிறைந்து கிடக்கிறது. அதை முதலில் அப்புறப்படுத்த வேண்டும். அடுத்தது ஏரியை முறையாக ஆழப்படுத்த வேண்டும். அடுத்தது ஏரி உடைப்பெடுக்காமல் இரண்டு ஆள் மட்டத்திற்குக் காரையை உயர்த்த வேண்டும். இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தார். இறுதியாக ஒரு முடிவோடு அந்த வேலையை ஏற்றுக்கொள்வதாக அதிகாரிகளிடம் கூறினார் பாலன்.

வேலை பாலன் கைகளுக்கு வந்துவிட்டது. இந்நிலையில் ஊரில் விவரம் தெரிந்த இளைஞரான ராமிடம் சென்று தன் பிரச்சனையைக் கூறினார் பாலன். ராம் அக்ரி பட்டமேற்படிப்பு முடித்து விட்டு குடுமியான்மலை வேளாண் பல்கலைக்கழகத்தில் பேராசியராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

“தம்பி.. இதுதான் எனக்குச் சொந்தமாக கிடைச்ச முதல் வேலை. நான் இதை ரொம்ப சிறப்பா செஞ்சா எதிர்காலம் ரொம்ப நல்லா இருக்கும்ணு தோணுது.. என்ன பண்ணலாம். இங்க கிடைக்கிற மெஷினெல்லாம் சரிப்படாது.. வேறு ஏதாவது நல்ல திறன் வாய்ந்த இயந்திரம் இருந்தா நல்லது.. உங்களுக்கு ஏதாவது தெரியுமா?”

“ரொம்ப நல்லாத் தெரியும்.. அமெரிக்காவில் தயாரானது பாப்காட் (bobcat) வாகன இயந்திரம். அதை ஒண்ணு வாடகைக்கு எடுத்தா போதும். அது எழுபது விதமான வேலைகளை செய்யும். ஏரியில் உள்ள குப்பையை வாரிவிடலாம். குளத்தை ஆழப்படுத்தலாம். வரப்பை உயர்ததலாம்’‘

“ரொம்ப நல்லதாப் போச்சு.. அந்த மெஷின் எங்கப்பா கிடைக்கும்..? ”

““கோயம்புத்தூரில் MARWELL ENNCON TECH PVT LTD நிறுவனம் இருக்கு. அதோட கிளை நம்ம திருச்சில இருக்கு. அங்கே பாப்காட்டை வாடகைக்கு எடுக்கலாம்” என்றார்

“அப்புறம் என்ன இப்பவே திருச்சிக்கு கிளம்புறேன்” என்று கிளம்பிவிட்டார் பாலன்.

அணுக வேண்டியது

21 Shasthiri Nagar, Opp KMCH,
Civil Aerodrome, Sitra, Coimbatore -14
91-422-439 9262
[email protected]

இது தவிர, சென்னை, சேலம், மதுரை, ஓசூர், கேரளாவிலும் கிளைகள் உள்ளன.

விளம்பர பகுதி

ஞாயிறு, 13 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon