மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 13 ஆக 2017

கே.இ.எச். நிறுவனத்தின் சந்தோஷம் பொங்கும் வீடு!

 கே.இ.எச். நிறுவனத்தின் சந்தோஷம் பொங்கும் வீடு!

ராமாநுஜம் இந்த 15 வருட சென்னை வாழ்க்கையில் எத்தனையோ வீடுகளில் வசித்துவிட்டார். எல்லாம் வாடகை வீடுகள். ஒரு வீட்டில் 5 மாதங்கள் இருந்துவிட்டாலே பெரிய விஷயம். தண்ணீர் பிரச்னை, மின்சாரம் பிரச்னை, ஏரியா பிரச்னை, ஹவுஸ் ஓனர் பிரச்னை என்று ஏதாவது ஒரு பிரச்னை வந்துவிடும். பிறகு, வீட்டை காலி செய்கிறேன் என்று சொல்லிவிட்டு வேறு வீடு பார்ப்பது. வட சென்னை மத்திய சென்னை தென் சென்னை என்று சென்னையின் எல்லா பகுதிகளிலும் வசித்துவிட்டார். இப்படி, அடிக்கடி வீடு பிடிக்காமல் ராமநுஜம் வீட்டை மாற்றுவதற்கு காரணம். வீடு, வசதி குறைவு, பிரச்னை எப்படி எதுவும் உண்மையான காரணம் இல்லை. உண்மையில் இதெல்லாம் ராமாநுஜத்தின் ஆழ்மனதிலிருந்து வெளிப்படும் கோபம்தான். ராமநுஜத்துக்கு கிராமத்தில் அரண்மனை மாதிரி வீடு. கிராமத்தில் விவசாயம் லாபகரமான தொழில் இல்லை என்றானபின் விவசாயம் செய்யப் பிடிக்காமல் படித்த படிப்புக்கு நல்ல சம்பளத்தில் அரசு வேலை கிடைத்த பின்னர், கிராமத்தை விட்டுவிட்டு சென்னைக்கு குடிவந்துவிட்டார்.

அதன்பிறகும், எந்த வீட்டில் இருந்தாலும் அரண்மனை போன்ற கிராமத்துவீடு நினைவில் வந்து மனதை ஏக்கத்துக்குள் அழுத்திவிடும். வேறு ஒரு விட்டுக்கு குடிபெயர்ந்துவிடுவார். ஒரு வழியாக சொந்த வீடு வாங்க கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்துவிட்டார். இப்போதுதான் அவருக்கு உண்மையான பிரச்னையே தொடங்கியது.

வீடு வாங்க போனால், பல நிறுவனங்கள் இங்குதான் வீடு கட்டப்போகிறோம். முதலில் பணத்தை கட்டுங்கள். பிறகு, நாங்கள் உங்களுக்கு வீடு கட்டித் தருகிறோம் என்று கூறுகிறார்கள். ஆனால், அவர்கள் வீடு கட்டி தருவதற்குள் பல ஆண்டுகள் கடந்துவிடும். அதன் பிறகு பேரன் பேத்திகளோடுதான் புதுவீட்டுக்கு குடிபோக முடியும்போல.

இதனால், ராமாநுஜம் ஒரு நம்பகமான மிகப்பெரிய கட்டுமான நிறுவனம் கட்டிய தனது கனவு வீட்டை தேடிக்கொண்டிருந்தார். வாங்கப்போகும் புதுவீடு கிராமத்து வீட்டை விட பெரியதாகவும் அழகாகவும் மாடர்னாகவும் இருக்க வேண்டும் என்பதுதான் அவரின் ஆசை.

ராமாநுஜம் புதுவீடு வாங்கும் முயற்சியில் இருப்பதை அவருடைய அலுவலக நண்பர் சீனிவாசனிடம் கூறினார். இதற்கு ஏன் இவ்வளவு அலைந்து திரிந்துகொண்டிருக்கிறீர்கள். நம்ம கே.இ.ஹவுசிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் கட்டிய வீட்டைப் பாருங்கள். கண்டிப்பாக உங்களுக்கு பிடித்திருக்கும் என்றார் சீனிவாசன்.

சீனிவாசன் கூறியதைக் கேட்ட ராமாநுஜத்துக்கு நம்பிக்கை வந்தது.

“நல்லா பெரிய வீடா இருக்க வேண்டும்” என்று தனது ஆசை வீட்டைப் பற்றிக் கூறினார் ராமநுஜம்.

ராமாநுஜத்தின் மனதிலுள்ளதைப் புரிந்துகொண்ட சீனிவாசன், அவரை அழைத்துக்கொண்டு சென்னையில் கிழக்கு கடற்கரை சாலையில் காரை வேகமாக செலுத்தினார்.

உத்தண்டி அருகே கார் ஒரு இடத்தில் திரும்பியது. அங்கே கே.இ.எச். நிறுவனம் கட்டிய பால்ம் கவுண்ட்டி விடுகள் மிகவும் அழகாக காட்சியளித்தன.

இந்த வீடுகளில் உங்களுக்கு எந்த வீடு பிடித்திருக்கிறது சொல்லுங்கள் என்று ராமாநுஜத்திடம் கேட்டார் சீனிவாசன்.

ராமநுஜத்துக்கு எந்த வீடு பிடித்திருக்கிறது என சொல்ல தெரியவில்லை. ஏனேன்றால், எல்லா வீடுகளும் மிகவும் அழகாக இருந்தன.

ராமநுஜம் தனக்கு பிடித்த மாதிரி, ஒரு வீட்டைக் காட்டி இதையே வாங்கிவிடலாம் என்று கூறினார்.

கே.இ.எச்.-ன் பால்ம் கவுண்ட்டியில் 22 தனித்தனி வில்லாக்கள் இருக்கின்றன. ஒவ்வொரு வில்லாவுக்கும் பால்ம் ரோஸ், பால்ம் லோட்டஸ், பால்ம் லில்லி, பால்ம் டுலிப் என அழகான பெயர்கள். வீட்டிலேயே கார் பார்க்கிங். அழகான வியூவில் பால்கனி, விசாலமான ஹால், 24 மணி நேர தண்ணீர் வசதி, மும்முணை மின்சாரம், வீடுகளைச் சுற்றி தென்னை மரம், எழில்மிகு இயற்கையான சுழல், அருகாமையில் கடற்கரை இதையெல்லாம் பார்த்த ராமநுஜத்துக்கு பால்ம் கவுண்ட்டி வில்லா மிகவும் பிடித்துவிட்டது. இப்படி ஒரு அழகான வீடு வாங்குவதற்கு உதவி செய்த நண்பர் சீனிவாசனுக்கு நன்றி சொன்னார். கே.இ.எச். பால்ம் கவுண்ட்டி வீடுகள் முன்பு கிராமத்து அரண்மனை வீடே தோற்றுப்போய்விட்டது என்று சந்தோஷமாகக் கூறினார் ராமாநுஜம்.

பால்ம் கவுண்ட்டியிலிருந்து மிக அருகாமையில் பிரத்தியங்கரா, சாயிபாபா கோயில்கள் அமைந்துள்ளன. விடுமுறை நாட்களை சந்தோஷமாகக் கழிக்க பக்கத்திலேயே மாயாஜால் உள்ளது. ஷாப்பிங் மால், ரெஸ்டாரண்ட், கல்வி நிறுவனங்கள் என எல்லா வசதிகளும் உள்ளன. அக்கரை, சோழிங்கநல்லூர் சந்திப்புகளும் சில நிமிட நேர பயணத்தில் அடைந்துவிடும்படியாக பக்கத்தில்தான் உள்ளன. இதையெல்லாம் நினைத்து ராமநுஜத்துக்கு மனதுக்குள் சந்தோஷம். இதையெல்லாம் படிக்கிற உங்களுக்கும் ராமாநுஜம் போல, உத்தண்டியில் கே.இ.எச்.-ன் பால்ம் கவுண்ட்டியில் வீடு வாங்க ஆசையா உடனடியாக தொடர்புகொள்ளுங்கள்.

தொடர்புக்கு..

கே.இ. ஹவுசிங் பிரைவேட் லிமிடெட்
எண் 18B, லஸ் அவென்யூ,
மயிலாப்பூர், சென்னை 600004.
தொலைபேசி: +91 44 64587458 /64587901/48554656
அலைபேசி: +91 9176987707
ஃபேக்ஸ்: +91 44 4261 8248
மின்னஞ்சல்: [email protected]

விளம்பர பகுதி

ஞாயிறு, 13 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon