மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 13 ஆக 2017

முன்மாதிரி சட்டமன்ற உறுப்பினர்!

 முன்மாதிரி சட்டமன்ற உறுப்பினர்!

சைதை துரைசாமி என்று இன்று நாம் அவரை அழைக்கிறோம். ஆனால் சட்டமன்றம் சென்ற புதிதில் அவர் சா. துரைசாமி என்றுதான் அழைக்கப்பட்டார். இதை எழுத்தாளர் ஜீவபாரதி தனது தொகுப்பில் பதிவு செய்திருக்கிறார்.

சைதையார் அவர்களின் கன்னிப்பேச்சு என்றைக்கு ஆற்றினார் என்று பார்த்தோம். அது என்ன என்று பார்ப்போமா?

1985 மார்ச் 13 ஆம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து முன்மொழியப்பட்ட தீர்மானத்தை வழிமொழிந்து பேசியதுதான் சைதை துரைசாமியின் கன்னிப்பேச்சு.

கன்னிப்பேச்சில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்ததோடு நிறுத்திக் கொள்ளாமல், தன் தொகுதி மக்களின் கோரிக்கைகளையும் அழகாய் கோர்த்து விட்டிருக்கிறார் மனித நேயர் சைதை துரைசாமி.

பொதுவாக ஆளுங்கட்சி உறுப்பினர் என்றால்… மாநிலத்தில் தேனாறும் பாலாறும் ஓடுவதாக வெளியே யாரிடமாவது கவிதை எழுதிக் கொண்டுசென்று சட்டமன்றத்தில் அதை தங்கள் வாயால் அரங்கேற்றுவார்கள்.

ஆனால் மனிதநேயர் வித்தியாசமானவர்., விவரமானவர். பொதுமக்களுக்கானவர்.

எனவே ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்துவிட்டு அத்தோடே தனது உரையில் சைதாப்பேட்டை மக்களின் கொசுப்பிரச்னையை பற்றிப் பேசினார்.

'சென்னை நகரத்தினுடைய கொசுத்தொல்லையைப் போக்குகிற வகையில் எப்படி தன்னிறைவுத் திட்டத்தை புரட்சித் தலைவர் எப்படி நிறைவேற்றினாரோ, அதேபோல, சென்னை மாநகரத்துக்கு மாத்திரம் தனியாக ஒரு செயல் திட்டத்தைக் கொண்டுவந்து அந்த வசதிகளை செய்து தரவேண்டும்" என்று வலியுறுத்தினார் மனித நேயர் சைதை துரைசாமி.

அத்தோடு இதைவிட்டுவிட அவர் என்ன சராசரி சட்டமன்ற உறுப்பினரா? மீண்டும் மார்ச் 15ஆம் தேதி இதே பிரச்னையை கவன ஈர்ப்புத் தீர்மானமாக கொண்டு வருகிறார். இதே பிரச்னையை மார்ச் 25 ஆம் தேதி கேள்வி நேரத்தில் மீண்டும் வினாவாகவும் தொடுக்கிறார். ஆளுங்கட்சி உறுப்பினர்தான்… ஆனால் தன் தொகுதியில் உள்ள பிரச்னைகளை கூறுவதால் அரசுக்கு தர்ம சங்கடம் ஏற்பட்டாலும் பரவாயிலை, மக்களின் பிரச்னை தீர்க்கப்படுவதே முக்கியம் என்பதால் தொடர்ந்து தன் மக்களுக்காக குரல் கொடுக்கிறார் மனித நேயர்.

தன் தொகுதியின் கொசுப் பிரச்னையை அவர் சும்மா விடவில்லை. மீண்டும் அதே வருடம் ஜூன் 10 ஆம் தேதி சுகாதாரத் துறை மானியக் கோரிக்கை நடக்கும்போது அதில் பேசுகிறார் மனித நேயர்.

"எங்கள் தொகுதியில் கொசுக்கள் வண்டுகளைப் போல் இருக்கின்றன. கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை வைக்கிறார். ஆம், சட்டப்பேரவையில் ஒருமுறை பிரச்னையை பேசிவிட்டு., அந்த பிரச்னைக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுத்தேன் என்று சொல்லிக் கொள்ளாமல்… அந்த பிரச்னை தீர்க்கப்படும் வரை தொடர்ந்து அரசாங்கத்தை ஆரோக்கியமாக துரத்துவதுதான் மனித நேயரின் சட்டசபை பண்பு.

1985 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி கேள்வி நேரத்தின்போது மனித நேயர் தனது தொகுதிக்காக முக்கியமான பிரச்னை ஒன்றை எழுப்புகிறார்.

"ஸ்ரீராம்பேட்டை,கலிக்குன்றம், பள்ளிப்பட்டு பகுதிகளுக்காக கழிவு நீர் பம்பிங் நிலையம் அமைக்க தொழில் நுட்ப நிர்வாகத்துக்கு சொந்தமான, ஒன்பது கிரவுண்ட் நிலத்தை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்துக்கு வழங்க அரசு திட்டமிட்டிருக்கிறதா? " என்று மனித நேயர் வினா தொடுத்திருக்கிறார்.

இதை ஒட்டி இடம் வழங்கப்பட்டு பம்பிங் ஸ்டேஷனும் அமைக்கப்பட்டது. இதுபோல சைதை தொதியில் இருந்த பல நூறு பிரச்னைகளை சட்டமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்து அவற்றைத் தீர்த்து வைக்க முன் கை எடுத்திருக்கிறார் மனித நேயர். அவரால் சைதை தொகுதியின் பல பிரச்னைகள் தீர்க்கப்பட்டிருக்கின்றன.

மூன்று வருடங்கள் மட்டுமே அவர் சட்ட மன்ற உறுப்பினராக இருந்திருந்தாலும் மூன்று முறை எம்.எல்.ஏ.வாக இருந்தால் என்ன பணிகள் செய்யமுடியுமோ அதை செய்திருக்கிறார் தம் தொகுதிக்கு.

சரி… சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தன் தொகுதிக்கு வேண்டியவற்றைக் கேட்கிறார், அரசிடம் இருந்து பெற்றுக் கொடுக்கிறார். பொதுவாகவே பரவலாகவே சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதி பிரச்னைகளையே கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு நமது ஜனநாயகத்தில் இருக்கிறது.

ஆனால் தனது தொகுதி பிரச்னைகளை கையிலெடுத்து போராடி அதற்குத் தீர்வு காணுவதோடு மட்டுமல்லாமல்… தன் தொகுதி என்ற வரையறையைத் தாண்டி தமிழகம் முழுவதற்குமான, ஏன் இந்தியா முழுவதற்குமான பொதுவான பிரச்னைகளுக்கெல்லாம் குரல் கொடுத்து, அவற்றுக்குத் திட்டவட்டமான தீர்வுகளையும் சட்டமன்றத்திலே வழங்கியவர் நமது மனிதநேயர்.

இந்த வகையில் மனித நேயர் சைதை துரைசாமி அவர்கள் இப்போது இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், இனி வரப் போகும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறார் என்றால் அது உண்மையே வெறும் புகழ்ச்சி அல்ல!

அந்த தேசம் தழுவிய அவரது சட்டமன்றப் பணிகளைப் பார்ப்போமா?

வளரட்டும் மனித நேயம்…

விளம்பர பகுதி

ஞாயிறு, 13 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon