மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 13 ஆக 2017

படகோட்டி நூற்றாண்டு விழாவுக்கு
படையெடுப்போம் கடலூருக்கு!
- அழைக்கிறார் அமைச்சர் எம்.சி. சம்பத்

 படகோட்டி நூற்றாண்டு விழாவுக்கு<br>படையெடுப்போம் கடலூருக்கு!<br>- அழைக்கிறார் அமைச்சர் எம்.சி. சம்பத்

புரட்சித் தலைவர் பொன்மனச் செம்மல், நம் தங்கத் தாரகையின் அரசியல் ஆசான், எட்டுத் திக்கும் எப்போதும் புகழ் மணக்கும் எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு விழாவை… அரசு விழாவாக மாவட்டம் தோறும் கொண்டாடி வருகிறார் நமது அண்ணன் முதல்வர் எடப்பாடியார் அவர்கள்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் அற்புத விளக்கை ஏற்றி வைத்த எம்.ஜி.ஆர். அதை பின் நமது புரட்சித் தலைவி அம்மாவின் கைகளில் ஒப்படைத்து காலத்தின் மடிகளில் ஓய்வெடுத்துக் கொண்டார். தலைவர் தந்த கழகம் என்னும் விளக்கை, தன் உழைப்பால் இன்னும் ஒளியாக்கி இந்தியா முழுமைக்கும் வழிகாட்டும் இயக்கமாக மாற்றினார், புரட்சித் தலைவி தங்கத் தாரகை அம்மா.

இன்று இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய கட்சி என்ற பெருமையினை நமக்கெல்லாம் கொடுத்துவிட்டு சென்ற வருடம் புரட்சித் தலைவர் வழியிலேயே இயற்கைப் பயணம் எய்தினார் அம்மா.

இந்த நிலையிலே கழகம் என்னும் கப்பல் அரசியல் புயல்களில் ஆடிவிடாமல், தன் பயணத்தை இனிதே தொடர இதோ நமது தலைமைக் கழக செயலாளர் அம்மாவால் நியமிக்கப்பட்ட நமது தலைமைக் கழக செயலாளர் மாண்புமிகு முதலமைச்சர் அண்ணன் எடப்பாடியார் அவர்கள்.,.. புரட்சித் தலைவர் புகழையும், புரட்சித் தலைவி அம்மா புகழையும் ஒருசேர நிலைநிறுத்தும் வகையில் புரட்சித் தலைவர் நூற்றாண்டு விழாவை மாவட்டம் தோறும் அரசு விழாவாக கொண்டாடி வருகிறார்.

அந்த வகையில்… கடலூர் மாநகர் மஞ்சை மைதானத்தில், வரும் ஆகஸ்ட் 16ஆம் தேதி, எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவை தமிழக அரசு கொண்டாடுகிறது, விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக அமைச்சர்கள், மற்றும் சட்டமன்ற

உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்கிறார்கள்.

கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளரும், கடலூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், தொழில்துறை அமைச்சருமான எம்.சி.சம்பத், விழா ஏற்பாடுகளைச் செய்துவருகிறார். விழாவுக்கு வரும் மக்கள் பாதுகாப்பாக வந்து செல்ல, குடிநீர் வசதி, சுகாதார வசதி, சாலை விரிவாக்கம், உணவு ஏற்பாடுகள்,

போக்குவரத்து வசதிகள், மழையில் மக்கள் நனையாமலிருக்க பாதுகாப்பான கூரைகள் என்று பிரம்மாண்ட ஏற்பாடுகளோடு எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்குத் தயாராகிறது கடலூர்.

விழாவில் எம்.ஜி.ஆரின் புகழ்பாடி கடலூர் மாவட்ட மக்களுக்கான விழாப் பேருரை நிகழ்த்துகிறார் மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. கடலூர் என்பது மீனவர் மக்கள் அதிகமாக வாழும் ஊர். மீனவ மக்கள் என்றாலே… புரட்சித் தலைவர் பாடிய, ‘கடல் மேல் பிறக்க வைத்தான் எங்களை கண்ணீரில் மிதக்க வைத்தான்’ என்ற படகோட்டிப் பாடல் வரிகள் நினைவுக்கு வரும்.

புரட்சித் தலைவர் தனது ஆட்சியிலே மீனவர்களின் கண்ணீர் துடைத்தார். அதேவழியில், அம்மாவும் மீனவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்தார். கச்சத் தீவினை மீட்க இறுதிவரை போரிட்டார் அம்மா. எம்.ஜி.ஆர்., அம்மா ஆகியோரின் வழியிலே வந்த எடப்பாடியாரும் மீனவர்களின் நலன்களுக்காக பல்வேறு திட்டங்களை தீட்டியவர். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் மீனவர்களுக்கான நற்செய்திகளையும் கொண்டு வருகிறார் முதல்வர்.

எம்.ஜி.ஆர்,நூற்றாண்டு விழாவை, அரசு விழாவாகவும், மக்கள் விழாவாகவும் ஏன் கொண்டாடுகிறோம், தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் மக்களுக்குத் தெளிவுபடுத்துகிறார்.

“புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், மக்கள் வறுமையையும், பசியையும் உணர்ந்தவர், அதனால்தான் பள்ளி மாணவர்கள் பசியைபோக்க மதிய உணவுத்திட்டத்தை கொண்டுவந்தார், மக்கள் வறுமையினைப் போக்கினார், அதனாலே தமிழக

மக்கள் எம்.ஜி.ஆருக்கு பெரும் ஆதரவு கொடுத்து மறையும் வரையில் முதல்வராக வைத்து அழகு பார்த்தார்கள்.

மக்கள் தலைவர் விட்டபணியை புரட்சித் தலைவி அம்மா தொடர்ந்தார், தமிழக அரசியலில் மட்டுமல்லாமல், தேசிய அரசியலிலும் சிம்மச் சொப்பனமாகவிருந்த

மறைந்த முதல்வர் புரட்சித் தலைவி அம்மா ஆசியோடு, அவரது கனவுகளை, மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவைச் சிறப்பாக கொண்டாடிவருகிறார்.

புரட்சித் தலைவர் நூற்றாண்டு விழாவுக்கு கட்சி பாகுபாடு இல்லாமல், கடலூர் மாவட்ட மக்கள் அனைவரும் அலைகடலெனத் திரண்டு வாரீர்-வாரீர்’’ என்று

அழைக்கிறார் தொழில் துறை அமைச்சரும், அதிமுக அம்மா அணி கிழக்கு மாவட்ட செயலாளருமான எம்.சி. சம்பத்.

பொன்மனச் செம்மலின் நூற்றாண்டு விழா என்றால் நலத்திட்ட உதவிகள் இல்லாமலா? மக்களுக்க்கான் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவாகவும் சிறப்பாக நடக்க இருக்கிறது கடலூரில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா.

படகோட்டி தலைவர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட கடலூருக்கு படையெடுத்து வாருங்கள்…

எம்.சி., சம்பத்
கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர்,
அதிமுக அம்மா அணி,
தொழில் துறை அமைச்சர்.

விளம்பர பகுதி

ஞாயிறு, 13 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon