மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 13 ஆக 2017

சூர்யாவின் உறுதியான முடிவு

 சூர்யாவின் உறுதியான முடிவு

சுந்தரமூர்த்தி பட்டுக்கோட்டை பகுதியில் பிரபல மருத்துவர். அவருக்கு மூன்று பிள்ளைகள். மூத்தவர் ராஜேஷ், மருத்துவம் படித்து பயிற்சியில் இருக்கிறார். அடுத்தவர் கணேஷ். அவரும் மருத்துவம் படித்துக்கொண்டிருக்கிறார். மூன்றாமவர் சூர்யா. அவரும் மருத்துவம் படிக்கப்போகிறார். இது சூர்யாவின் விருப்பம் அல்ல. டாக்டர் சுந்தரமூர்த்தியின் விருப்பம். காரணம் அவரும் டாக்டர். அவர் மனைவி சாரதாவும் டாக்டர். மூன்று மகன்களும் டாக்டர்களாக இருக்க வேண்டும் என்பது அவருடைய நீண்ட காலக் கனவு. அந்தக் கனவு கிட்டத்தட்ட 90 சதவிகிதம் நிறைவேறிவிட்டது. இப்போது சூர்யா மருத்துவம் படிக்கச் சென்றுவிட்டால் கனவு பூர்த்தியாகும். ஆனால் இந்தக் கனவிற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று மனதிற்குள் அடிக்கடி கூறிக்கொள்வான் சூர்யா. காரணம் அவனுக்கு மருத்துவம் படிக்க வேண்டும் என்ற விருப்பம் இல்லை. இன்னும் சொல்லப் போனால் மருத்துவம் செய்வதற்கு ஆழ்ந்த பொறுமையும், சகிப்புத்தன்மையும் வேண்டும் என்பது அவனது எண்ணம். அது சூர்யாவிடம் இல்லை என்று அவனே அடிக்கடி சொல்லிக்கொள்வான். சூர்யாவிற்கு மருத்துவத்தின் மீதான அதிருப்தியைக் காட்டிலும் மின்னணுத் துறையில் அவனுக்கு விருப்பம் அதிகம் இருந்தது.

ஏதாவது ஒரு கண்டுபிடிப்பை அந்த வீட்டில் நிகழ்த்திக்கொண்டிருப்பான். ஆனால் அதைப் பாராட்ட ஆள்தான் இருக்காது. சூர்யாவின் மூத்த அண்ணன் ராஜேஷ், அவனது மனநிலையை நன்கு புரிந்து வைத்திருந்தார். அவர் மட்டும் சூர்யாவின் கருத்திற்கு ஆதரவாக அவ்வப்போது பேசுவார். ஆனால் சூர்யா இதுவரை தன் விருப்பத்தை வெளிப்படையாகக் கூறியதில்லை. சூர்யா வடிவமைத்த ஒரு எலக்ட்ரானிக் உபகரணம் நீரின் தன்மையை அருமையாகப் பரிசோதித்தது. அதற்காக விருது ஒன்றையும் அவன் பள்ளியில் இருந்து பெற்றான் சூர்யா. அந்த விழாவிற்கு சூர்யாவின் தாயும் தந்தையும் வந்திருந்தார்கள். அவர்கள் எதையும் நுண்ணறிவோடு புரிந்துகொள்ளக் கூடியவர்கள்தான். அதனால் சூர்யாவின் எதிர்காலம் குறித்து சுந்தர மூர்த்தி மிகுந்த கவலை அடைந்தார். சூர்யாவின் விருப்பம் வேறு திசையில் பயணிக்கிறதோ என்ற சந்தேகம் அவருக்குள் ஏற்பட்டது. இருந்த போதும் அவன் மருத்துவம் படிக்க வேண்டும் என்றே அவர் விரும்பினார். அதுதான் அவன் எதிர்காலத்திற்கு நல்லது என்று நம்பினார். இந்நிலையில்தான் சூர்யாவின் நீட் தேர்வு முடிவு வந்தது. அதில் அவன் பெற்ற மதிப்பெண் மருத்துவ படிப்பிற்கு போதுமானதாகத் தெரியவில்லை.

சூர்யா வேண்டுமென்றே தேர்வை சரியாக எழுதவில்லை என்று குற்றம்சாட்டினார் சுந்தரமூர்த்தி. சூர்யா மௌனமாக இருந்து அவர் சொன்னது உண்மை என்பதை நிரூபித்தான். அப்போதுதான் சூர்யாவிடம் நேரடியாகப் பேசினார்.

"என்னதான் உன் பிரச்சனை..? "

"எனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லப்பா.. பிரச்சனை உங்க கிட்டதான்…" சொன்னான் சூர்யா.

"நேரடியாக கேட்குறேன்ல.. நேரடியா பதில் சொல்லு… என்ன உன் பிரச்சனை..?

"அப்பா.... நான் எனக்கு பிடிச்சதைப் படிச்சாதான் பெரிய ஆளா வருவேன். டாக்டர் தொழில் ரொம்ப உயர்வானதுதான். புனிதமானதுதான்.. நான் இல்லேன்னு சொல்லல. ஆனால் என் விருப்பம் எல்லாம் எலக்ட்ரானிக் துறையில இருக்கு. ஸோ நான் பிஇ எலக்ட்ரானிக் அண்ட் கம்யூனிகேஷன் படிக்கணும்" என்றான்.

சூர்யா சொன்னதைக் கேட்டு சுந்தரமூர்த்தி யோசனை செய்தார்.

"ஓகே உன் வழிக்கே நான் வர்றேன். நீ விருப்பப்பட்டதையே படி… பட் நான் சொல்ற காலேஜ்ல தான் நீ படிக்கணும். ஏன்னா நான் சொல்ற காலேஜ்ல நீ படிச்சா நீ நினைக்கிறத அச்சீவ் பண்ண முடியும்"

"ஓகேப்பா. அது எனக்குப் பிரச்சனை இல்ல. எப்படியும் நீங்க நல்ல காலேஜ்லதான் சேர்த்துவிடுவீங்க.. ஸோ எனக்கு சம்மதம்தான். எந்த காலேஜ்னு நான் தெரிஞ்சுக்கலாமா?"

"ஷ்யூர்.. கோயம்புத்தூர் தனலெட்சுமி சீனிவாசன் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங்ல நீ பிஇ பண்ணு.. அங்க ஆட்டட் வேல்யூ கோர்ஸஸ் இருக்கு. அருமையான லேப் எல்லாம் இருக்கு. உலகத் தரமான லைப்ரரி இருக்கு.. நிறைய கிளப்ஸ் இருக்கு… பல அறிஞர்கள் அந்த காலேஜ்க்கு செமினார் கொடுக்க வர்றாங்க" என்றார் சுந்தரமூர்த்தி.

"எனக்கு டபுள் ஓகேப்பா.." என்றான் சூர்யா.

தொடர்பிற்கு

​Dhanalakshmi Srinivasan College of Engineering

• NH-47 Palakkad Main Road,
• Navakkarai Post,
• Coimbatore -641 105.
• Phone : 0422 2930640,2935353
• Mobile : 9750956740, 50
• Email : [email protected]

விளம்பர பகுதி

ஞாயிறு, 13 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon