மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 13 ஆக 2017

வெற்றியை உறுதி செய்த இந்திய அணி!

வெற்றியை உறுதி செய்த இந்திய அணி!

இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ள இந்திய அணி நேற்று (ஆகஸ்டு 12) தொடங்கிய மூன்றாவது போட்டியிலும் சிறப்பாக விளையாடி வருகிறது.

முதலில் பேட் செய்த இந்திய அணி தொடக்கத்தில் சிறப்பாக விளையாடினாலும், பின்னர் களமிறங்கிய வீரர்கள் ஏமாற்றம் தந்ததால் இந்திய அணி ரன் குவிப்பு வேகம் குறைந்தது. ஆனால் இறுதியில் ஒரு விக்கெட் மீதமிருந்த நிலையில், அதிரடியாக விளையாடிய ஹார்திக் பாண்டியா 96 பந்துகளில் 108 ரன்களை சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இந்திய அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 487 ரன்களைச் சேர்த்தது. அதன் பின்னர் களமிறங்கிய இலங்கை அணி தொடக்கம் முதலே தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து வந்தது. இலங்கை அணியில் அதிகபட்சமாக கேப்டன் தினேஷ் சன்டிமால் 48 ரன்களைச் சேர்த்தார். முதல் இன்னிங்ஸில் 135 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது இலங்கை அணி. அதன் பின்னர் இந்திய அணி பாலோ ஆன் வழங்கியது. எனவே இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.

நிதானமாக விளையாடிவரும் இலங்கை அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 19 ரன்களை சேர்த்துள்ளது. தொடக்க வீரர் திமுத் மற்றும் புஸ்பகுமாரா ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். இன்னும் மூன்று நாள்கள் மீதமுள்ள நிலையில் இந்திய அணி வெற்றிபெறும் என்ற நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

ஞாயிறு, 13 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon