மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 13 ஆக 2017

ஜி.எஸ்.டி: மேற்குவங்கம் முதலிடம்!

ஜி.எஸ்.டி: மேற்குவங்கம் முதலிடம்!

நாடு முழுவதும் கடந்த மாதம் ஜூலை 1ஆம் தேதி சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்டது. இந்த புதிய வரிவிதிப்பில் தொழில் நிறுவனங்கள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியது. அதன்படி, நாட்டிலேயே அதிக நிறுவனங்கள் பதிவு செய்த மாநிலங்களின் பட்டியலில் மேற்குவங்கம் முதலிடத்தில் உள்ளது. மேற்கு வங்கத்தில் மட்டும் இதுவரை 56,000 நிறுவனங்கள் ஜி.எஸ்.டி-யில் பதிவு செய்துள்ளது என்று மத்திய நிதித்துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேவாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது " ஜி.எஸ்.டி-யின் கீழ் 0,5,12,18,28 ஆகிய 5 வரிவிதிப்புகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் வணிகர்கள் மற்றும் தொழில்துறையினர் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். ஜூலை 1ஆம் தேதிக்கு முன்பு 80 லட்சம் வணிகர்கள் பதிவு செய்திருந்தனர். அமல்மடுத்தப்பட்ட பின்னர் கூடுதலாக 13.2 லட்சம் வணிகர்கள் பதிவு செய்திருந்தனர்

நாட்டிலேயே அதிகமாக மேற்கு வங்கத்தில் 56,000 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. தொடர்ந்து இத்திட்டம் மேம்படுத்தப்படும். இதன்மூலம் வரும் நாட்களில் வருவாய் அதிகரிக்கும். தொடக்கத்தில் வணிகர்களுக்கு சில சிக்கல்கள் வரக்கூடும். ஆனால் இத்திட்டம் மிக நேர்த்தியானது. இமாசலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்டில் ஜி.எஸ்.டி-க்கு ஊக்கத்தொகை வழங்குவது தொடர்பான முடிவை ஜி.எஸ்.டி கவுன்சில் தான் எடுக்கும்" என்றார்.

ஞாயிறு, 13 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon