மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 13 ஆக 2017

என்னை கடைசி வரை காப்பாத்துவியா?: அப்டேட் குமாரு

என்னை கடைசி வரை காப்பாத்துவியா?: அப்டேட் குமாரு

சண்டே சந்தோசமா லீவ் போட்டுட்டு வீட்டுல நிம்மதியா தூங்கலாம்னு உக்காந்தா.. டிங்குன்னு ஒரு சவுட்டு... என்ன நோட்டிபிகேஷன் வந்துருக்குன்னு பாக்கும் போது யாரோ சரஹால என்னை கடைசி வரை காப்பாதுவியான்னு கேக்கறாங்க? இந்த மெசேஜ பாத்துட்டு நிம்மதியா ஒருத்தன் எப்படி தூங்க முடியும்? நீங்களே சொல்லுங்க மக்களே. இதெல்லாம் பாக்கும் போது வடிவேலு திமிரு படத்துல சோப்பு போட்டுக்கிட்டு இருக்கும் போது, வந்து அடிச்சிட்டு போவாங்களே அது தான் நியாபகத்துக்கு வருகிறது. யாருன்னு ஒவ்வொருத்தரா கொட்ட விட்டா, மறுபடியும் என்ன ஆகுறது.... சரி உங்க மொபைலுக்கு தான் இப்போ நோட்டிபிகேஷன் வருது... எல்லாம் அந்த சரஹா பண்ற வேலையா தான் இருக்கும்.. அத பாக்கறதுக்கு முன்னாடி அப்டேட்ட படிங்க. என்ன இன்னொரு நோட்டிபிகேஷன் வந்துருக்கு... (நீங்க ரொம்ப.?.......) மறுபடியும் முதல்ல இருந்தா?.....

MJ_twets

தண்ணி போதையில

வீட்டிக்கு வர்ர ஆம்பளைங்கள..,

தண்ணி ஊத்தி தெளியவைக்குற

டெக்னிக்க கண்டுபிடிச்சது நம்மூரு பெண்கள் தான்..,

HAJAMYDEENNKS

படுக்கையறையில் பொம்மைகளுக்கும் சேர்த்தே இடம் ஒதுக்குகிறார்கள் குழந்தைகள்...!

HAJAMYDEENNKS

ரேசன் கார்டு முதல் பான் கார்டு வரை ஆதார் அட்டையோடு இணைக்க சொல்கிறார்கள்.. ஒற்றுமையாக இருக்கும் மக்களை மட்டும் பிரிக்க நினைக்கிறார்கள்...!

drramadoss

கிராமப்புற மாணவர்களுக்கு சமவாய்ப்பு வழங்கவே நீட் தேர்வு: பொன்னார்- அடேங்கப்பா... நீட் தேர்வுக்கு இப்படி ஒரு விளக்கமா... மெய்சிலிர்க்கிறது!

saravananucfc

இனி வரும் காலங்களில் லேசான மழை வந்தாலும் நாம் சொல்ல போவது "அட மழை தான்"

idumbaikarthi

சர்வதேச பீரங்கி போட்டியின்போது நடுவழியில் பழுதாகி நின்ற இந்திய பீரங்கிகள் # இத வச்சுக்கிட்டா சீனாவை சண்டைக்கு கூப்பிட்டீங்களா அப்சரண்டீஸ்?

HAJAMYDEENNKS

இது இன்டர்நேஷனல் ஷோ - பிக்பாஸ் #

எப்படி கார் வச்சிருக்குற கரகாட்ட கோஷ்டி மாதிரியா...!

kumarfaculty

மரம் நடுவிழா பெரும்பாலும் ஆண்டுதோறும் 'ஒரே இடத்தில்' நடப்பதால்தான் மரங்களின் எண்ணிக்கை உயராமல் உள்ளது...!!!

Kozhiyaar

யாராவது வீட்டுக்கு வந்தா தான், எனக்கு வீட்ல நல்ல டீ கிடைக்குது என்ற நிலை பலருக்கு இன்று!!!

Shan Karuppusamy

அத்தனை கோடி பட்ஜெட், கமல்ஹாசன், ஓவியா, விளம்பரம்னு பில்ட் அப் பண்ணி வெச்சிருந்த பிக்பாஸ் டிரெண்டிங்கை இரண்டே நாட்களில் சரசரன்னு ஸ்வாஹா செய்வதற்குப் பெயர்தான் சரஹா...

palanikannan

முரசொலி பவளவிழாவில் பங்கேற்ற கமல் திமுகவின் கைக்கூலி -H.ராஜா

அதே விழாவில் பங்கேற்ற ரஜினிய ஏன் திட்டலைனு விளக்கலாமே

Kozhiyaar

வாசல் ஏறி வந்த திருமண அழைப்பிதழ்கள் இன்று 'வாட்ஸ் அப்'போடு நின்று விடுகின்றன

Kannan_Twitz

- என்னை கடைசி வரை காப்பாத்துவியாடா?

- கவலைபடாதமா காயத்திரியை விஜய் டிவி காப்பாத்தற அளவு உன்னை காப்பாற்றுவேன்.

#BigbossTamil

Kozhiyaar

நாம் அறியா வண்ணம் நம் முன் நடிப்பவருக்கு நம் நம்பிக்கையே ஆஸ்கர் அவார்டு!!!

நக்கல் மன்னன் 2.0

மழைக்கு கூட பள்ளிகூடம் பக்கம் ஒதுங்கியது இல்லை - எச்.ராஜா

தமிழிசை மாதிரி ஒரு டாக்டர தமிழகம் மிஸ் பண்ணிருச்சு

-லாக் ஆஃப்

ஞாயிறு, 13 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon