மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 13 ஆக 2017

1.62 லட்சம் நிறுவனங்களின் அங்கீகாரம் ரத்து!

1.62 லட்சம் நிறுவனங்களின் அங்கீகாரம் ரத்து!

நீண்ட நாட்களாக செயல்படாத 1.62 லட்சம் நிறுவனங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 1.62 லட்சம் நிறுவனங்களில் பாதிக்கு மேலான நிறுவனங்கள் மும்பை, டெல்லி, ஹைதராபாத் ஆகிய நகரங்களிலேயே இருந்துள்ளது. நிதிப் பரிமாற்றங்களை மேற்கொண்டும், வங்கிகளின் கடன் பெற்றுக்கொண்டும், செயல்படாமல் இருக்கும் போலி நிறுவனங்கள் மூடப்படுகிறதா என்று நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பப்பட்டது. இதற்கு ஆகஸ்ட் 11ஆம் தேதி மக்களவையில் கார்ப்பரேட் விவகார இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் எழுத்துப்பூர்வமாக பதிலளிக்கையில், “போலி நிறுவனங்கள் என்ற சொல்லுக்கு நிறுவனங்கள் சட்டத்தில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

இருப்பினும், கடந்த ஜூலை 12ஆம் தேதி வரையில் 1,62,618 நிறுவனங்களை பதிவேட்டில் இருந்து நிறுவனங்கள் சார்பதிவாளர்கள் நீக்கியுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார். இந்த 1,62,618 நிறுவனங்களில் 76,451 நிறுவனங்கள் மும்பை, டெல்லி, ஹைதராபாத் ஆகிய நகரங்களைச் சேர்ந்தவை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், சென்னையில் 12,133 நிறுவனங்களும், பெங்களூருவில் 11,286 நிறுவனங்களும், புனேவில் 10,083 நிறுவனங்களும், அகமதாபாத்தில் 9,625 நிறுவனங்களும், கொல்கத்தாவில் 8,078 நிறுவனங்களும் பதிவேடுகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

ஞாயிறு, 13 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon