மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 13 ஆக 2017

நீதித்துறையில் லஞ்சம்: 12 நீதிபதிகளுக்குக் கட்டாய ஓய்வு!

நீதித்துறையில் லஞ்சம்: 12 நீதிபதிகளுக்குக் கட்டாய ஓய்வு!

லஞ்சம் வாங்கினார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 12 நீதிபதிகளுக்கு ஜார்க்கண்ட் மாநில அரசு கட்டாய ஓய்வு வழங்கி உத்தரவிட்டுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் பணிபுரியும் நீதிபதிகள் லஞ்சம் பெற்றுக் கொண்டு தீர்ப்பு வழங்குவதாக குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று ஜார்க்கண்ட் அரசு அம்மாநில உயர் நீதிமன்றத்திடம் முறையிட்டது. இது தொடர்பாக, உயர் நீதிமன்ற நீதிபதிகள் நடத்திய விசாரணையில் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டது. அவரகளது பணி நடவடிக்கையில் நாணயம் மற்றும் நம்பிக்கை இல்லை என்பது கண்டறியப்பட்டது. எனவே அவர்களுக்கு கட்டாய பணி ஓய்வு வழங்குமாறு ஜார்க்கண்ட் அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்தது. அதை ஏற்று லஞ்சம் உள்ளிட்ட சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் பணியில் ஈடுபட்ட 12 மாவட்ட நீதிபதிகளுக்கு ஜார்க்கண்ட் அரசு நேற்று (ஆகஸ்ட் 12) கட்டாய ஓய்வு வழங்கி உத்தரவிட்டது. இந்த கட்டாய பணி ஓய்வு பெற்றவர்களின் பட்டியலில் மாவட்ட அமர்வு நீதிபதி, கூடுதல் அமர்வு நீதிபதி, முதன்மை நீதிபதி உள்ளிட்ட நீதிபதிகள் இடம்பெற்றுள்ளனர். இந்த நீதிபதிகள் விவரம் வருமாறு, மாவட்ட அமர்வு மற்றும் கூடுதல் அமர்வு நீதிபதிகள் அனில்குமார் சிங், கிரிஷ் சந்திரசின்கா, கிர்ஐஸ்ட்குமார் துபே, ஓம்பிரகாஷ் சிவஸ்தாவ், ராஜேஸ் குமார் பாண்டே, உமேஷ்சந்த் மிஸ்ரா உள்ளிட்டோர் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இவர்கள் தவிர தலைமை குற்றவியல் நீதிபதிகள் ரேட்டுகள் ராம் ஜியாவன், ராம்ஜித், அசோக்குமார் சிங் உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர்.

இதே போல, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மீது ஊழல் குற்றச்சாட்டு தெரிவித்த கொல்கத்தா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கர்ணன், உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக உத்தரவுகளைப் பிறப்பித்ததற்காக நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆனால், அவர் தெரிவித்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக உச்ச நீதிமன்றம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 13 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon