மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 13 ஆக 2017

நாராயணசாமிக்கு கிரண் பேடி ஆதரவு!

நாராயணசாமிக்கு கிரண் பேடி ஆதரவு!

வழக்கமாக எலியும் பூனையுமாக எதிரெதிர் திசையில் பயணிப்பவர்கள் புதுவை முதல்வர் நாராயணசாமியும், துணை நிலை ஆளுநர் கிரண் பேடியும். இந்நிலையில் முதன் முதலாக நாராயணசாமியின் நடவடிக்கைக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளார் கிரண் பேடி.

“புதுச்சேரி அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அனைவரும் ஒவ்வொரு வாராமும் தொகுதிகளுக்கு சென்று கட்சி பாகுபாடின்றி மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து அந்த இடத்திலேயே சரிசெய்ய வேண்டும். இந்த மக்கள் சந்திப்பை அடுத்த வாரத்தில் இருந்து தொடங்க வேண்டும்” என முதல்வர் நாராயணசாமி நேற்று(12.8.2017) அறிவித்தார்.

நாராயணசாமியின் இந்த முடிவிற்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநரான கிரண் பேடி தனது ஆதரவை அளித்தார். இன்று(13.8.2017), வாட்ஸ் ஆப் மூலம் தனது ஆதரவு செய்தியை கிரண் பேடி தெரிவித்தார்.

அதில் கிரண் பேடி கூறியதாவது:- ”மக்களை நேரில் சந்திக்கும் யோசனையை கடந்த ஆண்டு மே மாதம் துணைநிலை ஆளுநராகப் பொறுப்பேற்றதில்ரிந்து நான் கூறிவந்தேன். தற்போது அந்த முடிவெடுத்துள்ள அரசியல் பிரதிநிதிகளுக்கு நன்றி. இதன் மூலம் தொகுதியை சுத்தமாக வைத்து கொள்ள முடியும். அரசு அலுவலகங்கள், மருந்தகங்கள், பள்ளிகள் மற்றும் மக்கள் கூடும் இடங்களுக்கு சென்று மக்களின் குறைகளை கேட்டறிய முடியும். மாதத்திற்கு ஒரு முறை மக்கள் கூட்டங்கள் நடத்தி மக்களின் குறைகள் மற்றும் ஆலோசனைகளை கேட்டறிய வேண்டும். இதன்மூலம், புதுச்சேரி, தூய்மையான, பாதுகாப்பான மற்றும் மகிழ்ச்சியான இடமாக இருக்கும். இந்தியாவை மாற்றுவதற்காக, பொது அதிகாரிகள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மற்றும் நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் தினசரி மக்களின் தேவைகளுக்கும் குறைகளையும் கேட்டு சரிசெய்ய செய்ய வேண்டும்.” இவ்வாறு அவர் கூறினார்.

ஞாயிறு, 13 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon