மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 13 ஆக 2017

கே.பி.முனுசாமி மீது அவதூறு வழக்கு : திவாகரன்

கே.பி.முனுசாமி மீது அவதூறு வழக்கு : திவாகரன்

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா குறித்து தொடர்ந்து அவதூறு பரப்பி வரும், முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி மீது அவதூறு வழக்கு தொடரப்படும் என்று சசிகலா தம்பி திவாகரன் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா முதல்வராக ஆசைப்பட்டதால், அதிமுக இரண்டாக உடைந்தது. இரு அணிகளையும் இணைக்க அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவையும், தினகரனையும் கட்சியிலிருந்து நீக்க வேண்டும்.ஜெயலலிதா மரணத்திற்கு நீதி விசாரணை வேண்டும்' என்ற இரு நிபந்தனைகளையும் பன்னீர் அணியினர் முன்வைத்து வருகின்றனர். தினகரன் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து விரைவில் இரு அணியும் இணையலாம் என்ற செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்த சூழ்நிலையில் மதுரை மேலூரில் நாளை தினகரன் அணி சார்பில் நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்ட ஏற்பாடுகளை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா தம்பி திவாகரன்,' நாளை நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்திற்கு தமிழக அரசு இடையூறு செய்து வருகிறது. அதிமுகவில் அணிகள் என்ற ஓன்று இல்லை. கட்சி ஒருங்கினைந்துதான் உள்ளது. முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு எதிரான நிலைப்பாட்டை நாங்கள் எடுக்கவில்லை. எல்லாவற்றிற்கும் சசிகலா குடும்பமே காரணம் என்று கூறுவது ஏற்கத்தக்கதல்ல. சசிகலா குறித்து தொடர்ந்து அவதூறு கருத்துக்களை தெரிவித்து வரும் பன்னீர் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி மீது அவதூறு வழக்கு தொடரப்படும்' என்று தெரிவித்தார்.

ஞாயிறு, 13 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon