மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 13 ஆக 2017

டாவின்சி கதாபாத்திரத்தில் டிகாப்ரியோ !

டாவின்சி கதாபாத்திரத்தில் டிகாப்ரியோ !

ஹாலிவுட்டில் முன்னணி நடிகர்களின் ஒருவரான டிகாப்ரியோ, ஓவியர் மற்றும் கண்டுபிடிப்பாளர் டாவின்சியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்கிறார்.

புகழ்பெற்ற ஓவியமான மோனலிசா, தி லாஸ்ட் சப்பர் போன்ற ஓவியங்களை வரைந்த (1452 முதல் 1519 வரை) வாழ்ந்த லியோனர்டோ டாவின்சியின் கதாப்பாத்திரத்தை டிகாப்ரியோ ஏற்று நடிக்கிறார். டிகாப்ரியோ பல சிறந்த படங்களை தந்து ஹாலிவுட் ரசிகர்களை மட்டுமல்லாமல் உலக சினிமா ரசிகர்களையும் கவர்ந்தவர். இன்றளவும் உலகில் அதிக நபர்களால் பார்க்கப்பட்ட திரைப்படம் ‘டைட்டானிக்’. அதில் நடித்திருந்த டிகாப்ரியோ, சிறந்த நடிப்பின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பெற்றவர். டிகாப்ரியோவின் ஒவ்வொரு படமும் எல்லா ரசிகர்களாலும் கவரப்பட்டது. குறிப்பாக ‘தி பாய்ஸ் லைப், தி ஏவியேடர், தி ரேவனன்ட் போன்ற திரைப்படங்கள் உலகளவில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவ்வேற்பை பெற்றவை.

கடந்த 2015 ல் வெளி வந்த ‘ரேவனன்ட்’ திரைப்படத்திற்காகச் சிறந்த நடிகர் என்ற ஆஸ்கார் விருதையும் தட்டி சென்றார் டிகாப்ரியோ. ஓவியர், ஆராய்ச்சியாளர் எனப் பன்முக தன்மை கொண்ட டாவின்சி கதாப்பாத்திரத்தில் டிகாப்ரியோ நடிப்பது அவரது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இத்திரைப்படத்தை வருகிற அக்டோபர் 17 ஆம் தேதி வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது. வரலாற்றில் மிக முக்கியமான நபரான டாவின்சியின் வாழ்க்கையைத் திரையில் காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

ஞாயிறு, 13 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon