மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 13 ஆக 2017

திருச்செங்கோடு: ரூ1.25 கோடிக்கு மஞ்சள் ஏலம்!

திருச்செங்கோடு: ரூ1.25 கோடிக்கு மஞ்சள் ஏலம்!

திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று(12.08.2017) மஞ்சள் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் ரூ.1.25 கோடி மதிப்பிலான 2500 மூட்டைகள் மஞ்சள் ஏலம் போனது.

இங்கு வாரந்தோறும் மஞ்சள் ஏலம் நடைபெறுகிறது. ஆத்தூர், கெங்கவல்லி, கள்ளக்குறிச்சி, பொம்மிடி, அரூர், பரமத்தி, நாமக்கல், மேட்டூர் ஆகிய பகுதிகளில் இருந்து விவசாயிகள் மஞ்சள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

நேற்றைய ஏலத்தில் விரலி மஞ்சள் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.7,599 முதல் ரூ.8,869 வரையும், கிழங்கு மஞ்சள் ரூ.7,231 முதல் ரூ.8,457 வரையும், ஒட்டுமொத்தமாக 8500 மூட்டை மஞ்சள் ஏலம் போனது. இதன் மதிப்பு ரூ.1.25 கோடியாகும்.

ஞாயிறு, 13 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon