மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 13 ஆக 2017

யாரந்த ஷெர்லாக் ஹோம்ஸ்?

யாரந்த ஷெர்லாக் ஹோம்ஸ்?

விஷாலின் துப்பறிவாளன் திரைப்படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்தது. இத்திரைப்படத்தில் பிரசன்னா, வினய், சிம்ரன், இயக்குநர் பாக்யராஜ் போன்ற முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர்.

கார்த்திக் வெங்கட்ராமன் ஒளிப்பதிவில் தயாராகிவரும் இந்த திரைப்படத்திற்கு அரோல் கோறேல்லி இசையமைத்திருக்கிறார். ‘பிசாசு’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, நடிகர் விஷாலுடன் இயக்குநர் மிஷ்கின் கைகோர்த்திருக்கிறார். கிரைம் த்ரில்லர் படம் என்றாலே தமிழ் சினிமாவில் மிஷ்கின் இயக்கிய சில திரைப்படங்கள் முக்கிய இடம் பெரும். இவரின் சிறப்பான காட்சிபடுத்துதல் ரசிகர்களின் மனதில் ஒரு தனி இடத்தை பெற்றுள்ளது.

சமுதாயத்தில் நடக்கும் குற்ற சம்பவங்களை ஒரு மனிதாபிமானத்தோடு சேர்த்து தருவது மிஷ்கின் படத்தின் பாணி. தனக்கென்று திரைப்பட இலக்கணம் ஒன்றினை கையாண்டு வரும் மிஷ்கின் குற்ற பின்னணி கொண்ட திரைப்படங்களைத் தான் அதிகமாக இயக்கியுள்ளார். ‘அஞ்சாதே’ திரைப்படத்தில் பிரசன்னாவின் வில்லன் கதாபாத்திரம் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது. அதன் பிறகு தற்போது மீண்டும் இயக்குநர் மிஷ்கின்னுடன் கைகோர்த்துள்ளார் நடிகர் பிரசன்னா. தற்போது ‘துப்பறிவாளன்’ திரைப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்த நிலையில் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் ஆரம்பமாகி உள்ளது. மேலும் துப்பறிவாளன் திரைப்படம் வருகிற செப்டம்பர் 14 (2017)ஆம் தேதி வெளியாகும் என்று நடிகர் விஷால் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷெர்லாக் ஹோம்ஸ் நாவலின் பாதிப்பு எனது திரைப்படத்திலும் இருக்கும் என மிஷ்கின் தனது சமீபத்தில் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். இந்த திரைப்படமும் துப்பறியும் நபர்களை பற்றிய ஒன்று என்பதால், ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

ஞாயிறு, 13 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon