மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 13 ஆக 2017

பார்சல் உணவுகளுக்கும் 18% வரி!

பார்சல் உணவுகளுக்கும் 18% வரி!

ஏ.சி வசதி உணவகங்களில் வழங்கப்படும் பார்சல் உணவகங்களுக்கும் 18 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

ஜூலை 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஜி.எஸ்.டி (சரக்கு மற்றும் சேவை வரி) அமல்படுத்தப்பட்டது. இதில் ஏ.சி வசதி இல்லாத உணவகங்களுக்கு 12 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. ஏ.சி வசதி கொண்ட உணவகங்களுக்கும், மதுபான விற்பனை உரிமம் பெற்ற உணவகங்களுக்கும் 18 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. நட்சத்திர உணவகங்களுக்கு 28 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.

சில உணவகங்களில் ஒரு தளத்தில் ஏ.சி வசதியும், மற்றொரு தளத்தில் ஏ.சி வசதி இல்லாமலும் உள்ளது. இதுகுறித்து உணவக உரிமையாளர்கள் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய சுங்க மற்றும் கலால் வாரியம் விளக்கமளித்துள்ளது. இதுபற்றி மத்திய சுங்க மற்றும் கலால் வாரியம் தெரிவித்துள்ளதாவது, “உணவகத்தின் எந்த பாகத்திலும் ஏ.சி வசதி இருந்தால், அங்கு வழங்கப்படும் அனைத்து உணவுகளுக்கும் 18 சதவிகிதம் வரி விதிக்கப்படும். ஏ.சி உணவகங்களில் வழங்கப்படும் பார்சல் உணவகங்களுக்கும் 18 சதவிகிதம் வரி விதிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிறு, 13 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon