மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 13 ஆக 2017

பிரியங்கா சோப்ராவின் பாடல் வரிகள்!

பிரியங்கா சோப்ராவின் பாடல் வரிகள்!

விரைவில் வெளியாக உள்ளது நடிகை பிரியங்கா சோப்ராவின் அடுத்த இசை ஆல்பம். அவரது 'எக்ஸாடிக்', 'இன் மை சிட்டி' பாடல்கள் 2013 ஆம் ஆண்டு சமூக வலைத்தளங்களில் வெளியாகி கோடிக்கணக்கான ரசிகர்களின் வரவேற்பினைப் பெற்றது. இந்நிலையில் தற்போது 'யாங் அண்ட் ப்ரீ' என்ற புதிய பாடலைத் தயாரித்து வருகிறார். இந்தப் பாடலை வில் ஸ்பார்க்ஸ், இசையமைத்துள்ளார்.

யாங் அண்ட் ப்ரீ பாடல் குறித்து 'பில்போர்டு' இணையத்துக்குப் பிரியங்கா சோப்ரா அனுப்பியுள்ள மின்னஞ்சலில் கூறியிருப்பது: " என் வாழ்க்கையின் மிக இக்கட்டான சூழலில் இருந்தபோது இந்தப் பாடலை எழுதினேன். பாடலின் வரிகள் தனிமனித சுதந்திரம் குறித்து எழுதப்பட்டது. நம் ஒவ்வொருவருக்கும் இந்தப் பாடல் வரிகள் பொருந்தும். பாடலை 'வில் ஸ்பார்க்ஸ்' இசையில் கேட்கும்போது உணர்வுப்பூர்வமாக உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தப் பாடல் உருவாக உதவி செய்த வில் ஸ்பார்க்ஸ், டோபி காட், ரேச்சல் ராபின், டோலா சைன் ஆகியோருக்குத் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

பாடல் குறித்து இசையமைப்பாளர் வில் ஸ்பார்க்ஸ் " பிரியங்காவுடன் இணைந்து பணியாற்றுவது புதிய அனுபவமாக உள்ளது. பாடலில் அவரது குரல் மற்றும் பாடல் வரிகள் தனித்துவமான உள்ளது. இதற்கு முன்பு வெளியான என் பாடல்களில்ரிந்து இந்தப் பாடல் வித்தியாசமான இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

ஞாயிறு, 13 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon