மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 13 ஆக 2017

அடுத்த மூன்று நாள்களுக்கு மழை!

அடுத்த மூன்று நாள்களுக்கு மழை!

கடந்த சில நாள்களாக தமிழகத்தை மழை குளிர்வித்து வந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 13) முதல் அடுத்த மூன்று நாள்களுக்குத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை தொடர வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெப்பச் சலனத்தின் காரணமாகவும், வளி மண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சியின் காரணமாகவும் இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் உள் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகக் கடலோர மாவட்டங்களில் இன்று மாலை கனமழை பெய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரையில் இன்று காலையிலிருந்தே பல இடங்களில் லேசான சாரல் மழை பெய்துகொண்டிருக்கிறது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. மேலும் இன்று போலவே அடுத்த மூன்று நாள்களுக்குக் கனமழை தொடரலாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் போரூரில் 14 செ.மீ மழையும், திண்டிவனத்தில் 10 செ.மீ மழையும் பதிவானதாக சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ஞாயிறு, 13 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon